பேச்சு:பனமலை தாளகிரீசுவரர் ஆலயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Prabhupuducherry:

  • [1] இந்த இணைப்பில், 7 ஆம் நூற்றாண்டில், பல்லவர் கட்டிய கோயில்களில் சிவன் சோமாஸ்கந்தராக சித்தரிக்கப்படும் வழமைக்கும் மாறாக, இக்கோயிலில் காணப்படும் சிவனின் சுவரோவியம் நடராஜர் வடிவில் உள்ளது என்றே காணப்படுகிறது.
  • [2] இந்த இணைப்பில், தொல்லியல் சின்னங்கள் பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் தாளகிரீசுவரர் கோயில்தான் தரப்பட்டுள்ளதே தவிர நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு ஓவியம் அல்ல.

கட்டுரையில் மாற்றி விடலாமா, இல்லை உங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளதா என்பதைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 07:52, 2 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

மக்களுக்கு சரியான தகவல் சென்று அடைவது தான் எனது கருத்து. ஆகவே உங்கள் கூற்று சரியாக இருப்பின் உடனடியாக சான்றுடன் மாற்றவும் . மட்டற்ற மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி . புதுவைபிரபு 13:39, 2 நவம்பர் 2015 (UTC)

@Prabhupuducherry: நான் மேலே சுட்டியுள்ள இணைப்புகள் இரண்டும் நீங்கள் கட்டுரையில் மேற்கோளாகத் தந்துள்ளவையே. அதனால் அச்சான்றுகளின் விவரங்களை நீங்களும் மீண்டுமொரு முறை சரிபார்த்துக் கூற முடியுமா?--Booradleyp1 (பேச்சு) 15:06, 2 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]