பேச்சு:பதிலிடு பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலக்கணக்கூறுகளை பல்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமாக வகைப்படுத்துவர். எடுத்துக்காட்டாக, நாம் "case" என்பதைப் பொதுவாக இலக்கணக்கூறாகப் பார்ப்பதில்லை, வேற்றுமை உருபுகளைத்தான் முதன்மைப்படுத்துகிறோம். அதேபோல் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் குறிக்கப் பயன்படும் சொற்களை நாம் உரிச்சொல் என்ற ஒரே பிரிவின் கீழ் வைத்துள்ளோம்.

இவ்வகையில், பதிலிடுபெயர்கள் ஒரு தனிப்பிரிவாக தமிழ் இலக்கண மரபில் குறிப்பிடப்பட்டு வந்துள்ளதா அல்லது "pronoun" என்ற ஆங்கிலச்சொல்லின் மொழிபெயர்ப்பு மட்டுமா? -- Sundar \பேச்சு 09:07, 27 ஏப்ரல் 2007 (UTC)

சுந்தர் நீண்ட காலத்துக்குப் பின் விக்கிபீடியாவூடாகப் பேசிக் கொள்வதில் மகிழ்ச்சி. பதிலிடு பெயர்கள் என்பது பழந்தமிழில் ஒரு இலக்கணக் கூறாகக் கொள்ளப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் தற்காலத்தில் தமிழ் மொழியின் அமைப்புப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்கள், நவீன தேவைகளுக்கு ஏற்பப் புதிய வகைப்பாடுகளையும் உருவாக்கியுள்ளனர். முனைவர். ச. அகத்தியலிங்கம் எழுதிய தமிழ்மொழி அமைப்பியல் (2002), பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை எழுதிய தமிழ் வரலாற்றிலக்கணம் (மீள்பதிப்பு 2002) ஆகிய நூல்களில் பதிலிடு பெயர் (அல்லது மாற்றுப்பெயர்) என்ற வகைப்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் அகத்தியலிங்கம் தனது நூலில் இது பற்றி விரிவாக விளக்கியுள்ளார். Mayooranathan 10:15, 27 ஏப்ரல் 2007 (UTC)
எனக்கும் மீண்டும் த.வி. பயனர்களுடன் கலந்துரையாடி பங்களிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது, மயூரநாதன். மறுமொழிக்கு நன்றி. நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை கட்டுரையில் குறிப்பிடுவது நன்று. அதாவது இவ்வகைப்பாடு பழைய இலக்கண நூல்களில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அண்மைய தமிழ் இலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ள ஒன்று என்றும் நாம் எடுத்துக்காட்டுக்களுடன் குறிப்பிடலாம். -- Sundar \பேச்சு 10:22, 27 ஏப்ரல் 2007 (UTC)

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகரமுதலியில் adjective, adverbக்கு முறையே பெயர் அடைச்சொல், வினை அடைச்சொல் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவற்றையும் பள்ளியில் படித்ததாக நினைவில்லை. இது குறித்து மேற்கண்ட நூல்களில் ஏதும் கூறப்பட்டுளதா? க்ரியாவின் அகரமுதலி தவிர்த்து வேறு எங்கும் இந்த அடைச்சொல் என்பது குறிக்கப்பட்டுள்ளதா?--ரவி 10:51, 27 ஏப்ரல் 2007 (UTC)

சுந்தர் குறிப்பிட்டுள்ளபடி இக்கட்டுரை ஆங்கில இலக்கண வகைப்படுத்தல் சிந்தனையை ஒட்டி எழுந்துள்ளதையும் நூல் உசாத்துணைகளையும் நிச்சயம் குறிக்க வேண்டும்.--ரவி 10:55, 27 ஏப்ரல் 2007 (UTC)

இவ் வகைப்பாடு, ஆங்கில இலக்கண வகைப்படுத்தல் சிந்தனையில் எழுந்ததா அல்லது நவீன ஒப்பீட்டு மொழியியல் சிந்தனைகளின் வழி வந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இவ்வாறான வகைப்படுத்தல்கள் குறித்து நான் இங்கே குறிப்பிட்ட நூல்களைத் தவிர வேறும் பல கட்டுரைகளிலும், இணையத் தளங்களிலும்கூட வாசித்திருக்கிறேன். இது பற்றி இன்னும் ஆழமாக அறிய வேண்டும். இக்கட்டுரையை விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளது. அப்போது நீங்கள் எடுத்துக் காட்டியவை தொடர்பிலும் திருத்தங்கள் செய்கிறேன்.
adjective, adverb என்பவற்றுக்கு பெயரெச்சம், வினையெச்சம் என்றுதான் நானும் படித்தேன். இப்பொழுது பெயரடை, வினையடை போன்ற சொற்கள் க்ரியாவின் அகரமுதலியில் மட்டுமன்றிப் பல நூல்களிலும் தாராளமாகப் புழங்குகின்றன. நான் முன்னர் குறிப்பிட்ட நூல்களிலும் இவை பற்றிய விபரங்கள் உள்ளன. இவ்விரு சொற் பயன்பாடுகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள் பற்றி இனித்தான் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும். Mayooranathan 15:35, 27 ஏப்ரல் 2007 (UTC)
நான் ஏற்கெனவே குறிப்பிட்ட இணையத்தளக் கட்டுரை ஒன்றை மீண்டும் கண்டுபிடித்தேன். இங்கே பர்க்கவும் Mayooranathan 15:52, 27 ஏப்ரல் 2007 (UTC)

தமிழ் விக்சனரியில் adjective, adverb இரண்டையும் உரிச்சொல் என்றே குறித்து வருகிறோம். இது பிழை என்றால் தயவுசெய்தால் தெரிவியுங்கள். இப்போதே திருத்தி விடுவது நல்லது.--ரவி 15:56, 27 ஏப்ரல் 2007 (UTC)

பெயரெச்சம், வினையெச்சம் முதலிய பாகுபாடுகள் தொல்காப்பியத்தில் இல்லாவிட்டாலும், நன்னூல் காலத்திலேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற்
காலமுஞ் செயலும் தோன்றிப் பாலொடு
செய்வதாதி அறுபொருட் பெயரும்
எஞ்ச நிற்பது பெயரெச்சம்மே
என்று பெயரெச்சத்துக்கும்,
தொழிலும் காலமுந் தோன்றிப் பால்வினை
ஒழிய நிற்பது வினையெச்சம்மே
என வினையெச்சத்துக்கும் நன்னூலில் வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளது. எனவே தெளிவான விளக்கம் கருதி பெயரெச்சம், வினையெச்சம் என்னும் பகுப்பை விக்சனரியில் பயன்படுத்த வேண்டும். Mayooranathan 16:17, 27 ஏப்ரல் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பதிலிடு_பெயர்&oldid=132412" இருந்து மீள்விக்கப்பட்டது