பேச்சு:பண்பாட்டுப் பேரரசுவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேரரசுவாதம் என்னும் சொல் சரியா?[தொகு]

Imperialism என்பது பொதுவாக வலிவோடு பிறர்பீது ஏதொன்றையும் திணித்து பரப்பி விரிவாக்குவது என்று பொருள் தரும் என்று நினைக்கிறேன். வலிமையான பேரசுகள் தங்கள் வலிமையால் இப்படித் திணிப்புகள் செய்தாலும், இதனை பேரரசுவாதம் என்று கூறாமல், பண்பாட்டுத் திணிப்பு என்றோ பண்பாட்டுத் திணிப்பியம் என்றோ கூறலாமா? Hegemony, forceful domination என்னும் கருத்துகள் இதனுடன் தொடர்புடையவை. பண்பாட்டுத் திணிப்பாண்மை என்றும் கூடச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.--செல்வா 22:12, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

பேரரசுவாதம் என்பது இங்கேயுள்ள பயன்பாட்டுக்கு துல்லியமாகப் பொருந்துகிறதா என்று நீங்கள் வெளியிட்டிருக்கும் ஐயப்பாடு சரிதான். ஆனால், இதன் பொருளை திணிப்பு என்னும் குறுகிய பொருளுக்குள் அடக்கிவிடமுடியாது என்பது எனது கருத்து. Merriam Websters அகரமுதலி Imperialism என்பதற்குப் பின்வரும் பொருள் தருகிறது:
the policy, practice, or advocacy of extending the power and dominion of a nation especially by direct territorial acquisitions or by gaining indirect control over the political or economic life of other areas; broadly : the extension or imposition of power, authority, or influence

முக்கியமாக cultural Imperialism என்று கூறும்போது அது political Imperialism இன் தொடர்ச்சியாக வருவதான பூடகமான பொருட் தொனிப்பும் உண்டு. இதை விளக்க திணிப்பு அல்லது திணிப்பாண்மை போதுமானது அல்ல என்பது எனது கருத்து. மயூரநாதன் 02:42, 28 ஆகஸ்ட் 2008 (UTC)

பண்பாட்டு மேலாதிக்கம்  ! --Natkeeran 18:20, 30 ஆகஸ்ட் 2008 (UTC)