பேச்சு:பணகுடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர் அடையாளம் தெரிவிக்காத ஐ.பி. முகவரி மட்டும் தெரியும் ஒருவர் (இவர் "MSM.VANISKAR M.A.,B.Ed.," என்பவரா??) விக்கி நடைமுறைகளை அறியாமல் (கட்டுரைக்குள் என்ன இருக்கலாம் என்பதை அறியாமல்) சில திருத்தங்களை மீண்டும் மீண்டும் செய்கின்றார். அவர் ஒரு பயனர் கணக்கைத் தொடக்கி பங்களித்தால், அவருடன் உரையாடி எப்படிச் செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டலாம். இவ் அடையாளம் காட்டாத பயனர் "MSM.VANISKAR M.A.,B.Ed.", என்றால், அவரைப் பயனர் கணக்கு ஒன்றைத் தொடங்கி பங்களிப்புகள் செய்ய வேண்டுகின்றேன். மீண்டும் மீண்டும் பிழையான மாற்றங்கள் செய்தால், அந்த ஐ.பி. முகவரியில் இருந்து வரும் பங்களிப்புகளை நிருவாகிகளில் யாரேனும் ஒருவர் தற்காலிகமாக தடை செய்ய நேரிடலாம். --செல்வா 14:20, 19 பெப்ரவரி 2012 (UTC)

இக்கட்டுரையிலுள்ள இராமலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் கோவில் தலைப்பை தனிக்கட்டுரையாக மாற்றம் செய்யலாம். (நாம் பிரித்துத் தனிக்கட்டுரையாக ஆக்கினால் இக்கோயில் தகவலைச் சேர்த்தவர் பெயர் விடுபடலாம். அவரே புதிய கட்டுரையை உருவாக்கினால் நல்லது) புனித சூசையப்பர் திருத்தலம் எனும் பெயரில் தனிக்கட்டுரை இருப்பதால் இப்பகுதியைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு தனிக்கட்டுரைக்கு இணைப்பு அளிக்கலாம். கட்டுரையில் மேலும் சில மாற்றங்களும், விக்கியாக்கமும் செய்யப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:44, 6 மே 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பணகுடி&oldid=3013157" இலிருந்து மீள்விக்கப்பட்டது