பேச்சு:பட்டையகலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதிரவன்,

தங்கள் குறுகட்டுரையை கீழே கொடுத்துள்ளேன், அதன் கீழே என் மாற்றங்களைக் கொடுத்துள்ளேன். சரி பாருங்கள்:


Bandwidth-அலைவரிசைப்பட்டை அகலம்

ஒப்புமைக் குரல் சமிக்ஞை, ஒரு தனிப்பட்ட அதிர்வெண் மட்டும் கொண்டு திகழ்வதில்லை; தொடர்பாடல் தடத்தில் உள்ள பலவேறுபட்ட அதிர்வெண்கள் கொண்ட அலைவடிவத்தால் ஆனது. அதிர்வெண்களின் ஒரு குறிப்பிட்ட கூட்டுக் கலவைதான் ஒருவருடைய குரலை நிர்ணயிக்கின்றது. இயற்கையின் பல படைப்புகளும் நிகழ்வுகளும் பலதரப்பட்ட அதிர்வெண்களின் கூட்டுக் கலவைகளாக வெளிப்படுகின்றன. வானவில்லின் வண்ணங்கள் பல்வேறு ஒளி அதிர்வெண்களின் சேர்க்கையே; இசையொலியும் பல்வேறு கேட்பொலி அதிர்வெண்களாலானதே. சமிக்ஞைகளில் உள்ள அதிர்வெண்களின் அளவெல்லையைக் குறிப்பது, தொடர்பாடல் களத்தில் உள்ள வழக்கம். இதை அலைவரிசைப் பட்டை அகலம் என்று வழங்குவர்.

எ-டு: தொலைபேசியில் பேச்சுச் சமிக்ஞையின் அலைப்பட்டை, 200 Hz-3500 Hz வரை எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.


செல்வாவின் மாற்றம்: தலைப்பு அலைப்பட்டை அகலம் அல்லது அதிர்வெண் பட்டை அகலம் என்று மாற்றப்படவேண்டும்.

அலைப்பட்டை அகலம் என்பது ஒரு கருவியின் அல்லது ஒரு தொலை தொடர்பு அமைப்பின் பயன்பாட்டுக்குட்பட்ட அதிர்வெண்கள் அடங்கிய அலைப்பட்டை ஆகும். இந்த அலைப்பட்டையை மீறிய அதிர்வெண்கள் கொண்டிருந்தால் கருவி அவற்றைப் பயன்படுத்த இயலாது. எடுத்துக்காட்டாக தொலைபேசியில் பயன்படும் குறிப்பலைகளின் அதிர்வெண் பட்டை 200 ஹெர்ட்ஸ் Hz - 3500 ஹெர்ட்ஸ் Hz வரை எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் சில பரிந்துரைகள்:

சமிக்ஞை என்பதற்குப் பதிலாக, குறிப்பலை, குறிசை, குறிப்பசை (குறிப்பு + அசைவு = குறிப்பு தாங்கிய அசைவு), குறிதி, குறியை, குறினை, குறியுள் என்று ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

Start a discussion about பட்டையகலம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பட்டையகலம்&oldid=344431" இருந்து மீள்விக்கப்பட்டது