பேச்சு:பஞ்சக புராணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சக புராணம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


அன்புள்ள நடராசன் கட்டுரை சான்றுகளுடன் சுருக்கமாக உள்ளது.
இது ஒரு நூலைப் பற்றியது.
இந்த நூலைப் பற்றி வேறு செய்திகள் இருந்தால் விரிவுபடுத்தலாம்.
சமயக் கருத்து விரிவு இங்குச் சேர்க்கப்படக் கூடாது.
சமயக் கருத்துக்களை எழுத வேறு கட்டுரைகளைத் தெரிவு செய்யலாம்.
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}} இது போன்ற குறியீடுகளை இலக்கியம் பற்றிய கட்டுரையில் சேர்க்க வேண்டாம்.
பஞ்சகம் என்னும் தலைப்பில் சமயக் கட்டுரை ஒன்று எழுதி அங்கு இக் குறியீட்டை இடலாம். --Sengai Podhuvan (பேச்சு) 19:14, 30 ஏப்ரல் 2013 (UTC)

இந்தக் கட்டுரை சைவ சமயத்தின் பகுப்பின் கீழ் உள்ளது. கட்டுரையின் இரண்டாவது வரியே சிவாலயங்களில் திருமுறை ஓதும் முறைமை என்று வருகிறது. சிவத்துடன் சம்மந்தமாகும் அனைத்துமே சைவமாகிறது. அதில் இலக்கியம் என்ற தனித்த பார்வையும் அடங்கும். கட்டுரையானது சைவக் குறுங்கட்டுரையாக இருக்கும் பட்சத்தில் விக்கித்திட்டம் சைவம் மூலம் பங்குகொள்ளும் பயனர்கள் மேம்படுத்த உதவி செய்வார்கள். தங்களுடைய கருத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:07, 4 மே 2013 (UTC)[பதிலளி]

அன்பரீர் உங்கள் கருத்து சைவ சமயம் என்னும் பகுப்பாக அடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உங்கள் குறியீடு இங்கு வேண்டாம். இது தமிழியல். --Sengai Podhuvan (பேச்சு) 23:02, 5 மே 2013 (UTC)[பதிலளி]

சைவக் குறியீடு என்பது எனது குறியீடு என்றும், இந்த கட்டுரை தங்களது கட்டுரை என்றும் தாங்கள் எண்ணுவதிலிருந்து விடுதலை பெறுங்கள். இன்றல்லது, நாளை இக்கட்டுரை சைவத்துடன் இணைக்கப்படுதலை தவிர்க்கவே இயலாது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:00, 25 மே 2013 (UTC)[பதிலளி]

பகுப்பு[தொகு]

  • சைவ சமயம் என்னும் பகுப்பை இப்போது காட்டியுள்ளது போலக் காட்டுவது கட்டுரைக்குப் பெருமை. ஆனால் 16 ஆம் நூற்றாண்டு நூல்கள் என்னும் பகுப்பை அழித்ததுதான் கொடுமை. நூற்றாண்டுப் பாகுபாடுகளை உருவாக்கியவர் நற்கீரன். இது 16 ஆம் நூற்றாண்டுச் சமயநிலைதானே. அதை அழிக்கலாமா? எண்ணிப் பாருங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 19:20, 25 மே 2013 (UTC)[பதிலளி]
தாங்கள் பக்க வரலாற்றினைப் பார்த்துவிட்டு பிறகு பழிசொல் சொல்ல வேண்டுகிறேன். என் பங்களிப்பில் சைவ குறுங்கட்டுரையையும், சைவ வார்ப்புருவையும்தான் இணைத்துள்ளேன். தாங்கள் குறிப்பிடும் 16ம் நூற்றாண்டு பகுப்பை நான் அழிக்கவில்லை. நம்பிக்கையில்லையென்றால் நிர்வாகிகளை அனுகி முடிவெடுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:29, 31 மே 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பஞ்சக_புராணம்&oldid=1431138" இலிருந்து மீள்விக்கப்பட்டது