பேச்சு:பசுபதீசுவரர் கோயில், பசுபதிகோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசுபதீசுவரர் கோயில், பசுபதிகோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இரு கோயில்கள்[தொகு]

1) புள்ளமங்கை கோயில் (ஏழூர்த்தலங்களில் ஏழாவது கோயில்) ஊரின் பெயர் : வெள்ளாளப் பசுபதிகோயில் அமைவிடம் : தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து மேற்கே ஐந்து நிமிட நடைதூரத்தில் கோயில் உள்ளது. அய்யம்பேட்டை கண்டியூர் சாலையில் அய்யம்பேட்டையிலிருந்து 1 கிமீ தூரத்தில் உள்ளது. இறைவன் : ஆலந்துறைநாதர், பிரம்மபுரீஸ்வரர், புள்ளமங்கலத்து மகாதேவர் இறைவி : அல்லியங்கோதை, சௌந்தரநாயகி சிறப்பு  : சோழர் காலச் சிற்பக் கலைக்கூடமாக இக்கோயில் உள்ளது. மிக நுட்பமான சிற்பங்களை இக்கோயிலில் காணலாம்.புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் எனப்படுகின்ற கோயில் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும்.

2) பசுமங்கை கோயில் (ஏழூர்த்தலங்களில் ஐந்தாவது கோயில்) ஊரின் பெயர் :கள்ளர் பசுபதிகோயில் அமைவிடம் : தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து தெற்கில் 0.5 கிமீ தொலைவில் பிரிவு சாலையில் கோயில் உள்ளது. இறைவன் : பசுபதீஸ்வரர் இறைவி : பால்வள நாயகி, லோகநாயகி சிறப்பு  : கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்று.கடைசியாக தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள உச்சிஷ்ட கணபதி ஓர் அரியசிற்பக்கலைப்படைப்பாகும்.

மேற்கண்ட இரு கோயில்களும் அய்யம்பேட்டை அருகே உள்ள இரு தனித்தனிக் கோயில்களாகும். இவ்விரு கோயில்களுக்கும் நான் நேரில் சென்றுள்ளேன், புகைப்படங்கள் எடுததுள்ளேன். புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் பற்றிய பதிவு முன்னரே உள்ளது. தற்போது பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் பற்றிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பல நிலைகளில் இரு கோயில்களையும் ஒன்றாக நினைத்து இணைத்து எழுதிவிடுகின்றனர். தெளிவிற்காக மேற்கண்ட விவரம் தரப்பட்டுள்ளது. கூடுதல் செய்திகள் கிடைக்கும்போது இவ்விரு கோயில்களைப் பற்றிய பதிவுகளை மேம்படுத்துவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:19, 12 மே 2016 (UTC)[பதிலளி]