பேச்சு:பக்டிரியல் படிவாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png பக்டிரியல் படிவாக்கம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

கட்டுரையேய் செம்மை படுத்தியற்கு மிக்க நன்றி

makizNan

நான் செய்த உரை தி. கீழே. கனகோ வேறு யாரோ அதே நேரத்தில் உரை தி. செய்ததால் பதிவாகவில்லை. மீண்டும் இதனை மறுபார்வை இடுகின்றேன். --செல்வா 00:11, 12 ஜூலை 2009 (UTC)

பக்டிரியல் படிவாக்கம் (படியெடுப்பு)[தொகு]

பக்டிரியல் படிவாக்கம் (படியெடுப்பு) (bacterial cloning) என்னும் நுட்பம் மூலக்கூறு உயிரியிலின் ஒரு முக்கியமான அடிப்படையான நுட்பம். ஒரு புரதத்தை மிகைபடுத்த வேண்டும் என்றாலும் (உ. தா. தீ நுண்ம தடுப்பு மருந்துகள் , viral protein or protein sub-unit vaccines) அல்லது மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உருவாக்க வேண்டும் என்றாலும் இந் நுட்பத்தை பயன்படுத்தியே ஆக வேண்டும். மேலும் புரதங்களுக்கு இடையே நடைபெறும் இணைவாக்கம், தொடரூக்கி ஆய்வுகள் என எவ்வித மூலக்கூறு உயிரியிலின் ஆய்வும் , இம்முறையெய் தொடாமல் செல்வதில்லை.

பக்டிரியல் படிவாக்க்கத்தில் (படியெடுப்பு) (bacterial cloning) பல முறைகள் உள்ளன. பி.சி.ஆர். படிவாக்கம்,உள்-பிணைவு படிவாக்கம் (In-fusion cloning) என்ற முறைகளும் உள்ளன.

இந் நுட்பத்திற்கு எ. கோலி (E.coli) என்கிற நிலைகருவற்ற (Prokaryotes) உயிரினத்தில் வரும் பக்டிரியா பயன்படுத்தப்படும். மேலும் எ.கோலி பல சிறப்பு விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ளன.

  • நோயைத் தூண்டுபவை அல்ல.
  • இருபது நிமிடத்திற்கும் ஒருமுறை இரு உயிரணுக்களாக (கலங்கலாக) பெருகும் தன்மை.
  • எளிதாக கையாளும் தன்மை
  • வளர்ப்பதில் எளிமை (மிகையான முதலீடுகள் இல்லை)
தேவையான பொருள்களும் உள் -முறைகளும்

மாற்றப்பட்ட எ.கோலி கலங்கள் (Competent cells)

தேர்ந்தெடுக்கும் மருந்து (selectable antibiotics)

வளரூக்கி (Bacterial media)

படிவாக்கம் செய்யும் பரப்பி (Vector)


மாற்றப்பட்ட எ.கோலி கலங்கள்

கால்சியம் குளோரைட் என்ற வேதி பொருளால் எ.கோலி கலங்கள் இருமுறை கழுவப்படும். இவை அனைத்தும் வெப்பநிலை 4 °C (பனிக்கட்டி) செய்யப்படும். இதனால் எ.கோலி உயிரணுவின் (கலத்தின்) சவ்வுகள் மென்மையாக்கப்பட்டு, நெளியுந்தன்மையுடன் (flexibility) இருக்கும்.

தேர்ந்தெடுக்கும் மருந்து (selectable antibiotics)

இவைகள் பரப்பிகளை பொருந்து அமையும் (எ.கா. அம்பிசிலின், கனமைசின்)

படிவாக்கம் செய்யும் பரப்பி (Vector)

பரப்பிகளில் படிவாக்க பரப்பி (Cloning vectors) என்றும், புரத மிகைப்படுத்துதல், இருவாழ் -பரப்பி என பல வகைகள் உள்ளன. பெரும்பாலான படிவாக்க பரப்பிகளில் "LacZ" என்ற மரபணு உள்ளதால், படிவாக்கம் செய்தபின், டி.என்.ஏ பரப்பிகளில் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என எளிதாக அறியலாம். ஏனெனில் டி.என்.ஏ இணைக்கப்பட்டு இருந்தால் வெள்ளை நிறத்திலும், இணைக்கப்படாமல் இருந்தால் நீல நிறத்திலும் உயிரணுக்கள் (கலங்கள்) வெளிப்படும் (blue, white selection). இவை கட்டுள்ள நொதிகளால் (Restriction enzymes) ஒன்று அல்லது இரண்டு (Ex. HindIII or HindIII and BamHI) நொதிகளால் வெட்டப்பட்டு இருக்கும்.

படிவாக்கம் செய்யப்படும் டி.என்.ஏ (DNA insert)

நேரடியாக பாலிமரசு தொடர் வினை முடிந்து வரும் டி.என்.ஏ பொருளாகவோ அல்லது இரு கட்டுள்ள நொதிகளால் வெட்டப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்ட டி.என்.ஏ வாக இருக்கும்.

இணைவு நொதி (DNA ligase)

இந் நொதி பரப்பிகளையும், டி.என்.ஏவையும் இணைக்க கூடியது.

மேலும் படிவாக்கம் செய்யப்படும , டி.என்.ஏவை எ.கோலி உயிரணுவில் உள்-தள்ளுவதற்க்கான உருமாற்றம் அல்லது உருபெயர்ப்பு ("transformation") என்ற நுட்பமும் இவ்விடத்தில் பயன்படுத்தப்படும்.

படிவாக்கம் செய்ய வேண்டிய டி.என்.ஏ கள், பரப்பி மற்றும் இணைவு நொதி சேர்க்கப்பட்டு, வெப்பநிலை 4- 18 °C இல், 2-14 மணி நேரங்கள் வைக்கப்படும். பின் இவை எ.கோலி உயிரணுக்களோடு கலந்து 30 நிமிடத்திற்கு பனிக்கட்டிகளில் நிறுத்தப்படும். அரை மணி நேரம் கழித்து, இக்கலவையெய் தீடீரென (மிக விரைந்து)42 °C வெப்பநிலைக்கு உயர்த்தப்படும் பொழுது, எ.கோலி சவ்வில் ஏற்படும் நெளிவுகளால் டி.என்.ஏ இணைக்கப்பட்ட பரப்பிகள் எ.கோலி உயிரணுக்குள் உள் ஊடுருவி விடும்.

வளரூக்கிகளில் தேர்ந்தெடுக்கும் மருந்துகள் இடப்படுவதால் , பரப்பிகள் உள் சென்ற உயரணுக்கள் மட்டுமே வளர்ரூக்கிகளில் வளர முடியும். ஏனெனில் பரப்பிகளில் உள்ள ஒரு குறிபிட்ட மரபணு , தேர்ந்தெடுக்கும் மருந்துகளில் விளைவுகளை எதிர்த்து வாழும் தனமையை எ.கோலி உயிரணுக்களுக்கு அளிகின்றன.உள் சென்ற பரப்பிகளை பாலிமரசு தொடர் வினை மூலமோ அல்லது மற்ற நுட்பகளினால் (DNA sequencing, restriction digestion) உறுதிபடுத்தலாம்.

மேலோட்டமாக படிப்பதற்கு எளிமையாக இருந்தாலும் , இந் நுட்பத்தில் பல சிக்கல்களை ஆய்வாளர்கள் எதிர்கொள்வார்கள். மேலும் படிவாக்க திட்டமிடலை (cloning strategy) மூலக்கூறு உயிரியலை நன்றாக புரிந்தவர்கள் மட்டும் மேற்கொள்ள முடியும்.

வெளி இணைப்புகள்[தொகு]

மனித மரபணுமுழும அறிதல் திட்டம் தகவல்தாள்- படிவாக்கம் அல்லது உயிரினப் படியெடுப்பு

ஆங்கில விக்கி இணைப்புகள் பொருத்தமானவை இல்லை[தொகு]

மேலும் bacterial cloning கட்டுரையின் ஆங்கில இணைப்பு தவறானது. this is linking with Bacterial artificial chromosome. படிவாக்க கட்டுரை ஆங்கிலத்தில் இல்லையென்றால் இணைப்பு கொடுக்கமால் விட்டு விடவும். - பயனர் மகிழ்நன் கூற்று --செல்வா 02:42, 13 ஜூலை 2009 (UTC) எனவே பிற மொழி விக்கி இணைப்புகளை நீக்க இருக்கின்றேன்.--செல்வா 02:42, 13 ஜூலை 2009 (UTC)

தலைப்பு மாற்றம் தேவை[தொகு]

பாக்டீரியல் படிவாக்கம் என்று மாற்றப் பரிந்துரைக்கின்றேன். பக்டிரியல் என்னும் சொல்லை pucktiriyal என்று ஒலிக்க வேண்டும். பாக்டீரியல் என்று இருந்தால் paakteeriyal என்று ஒலிக்க வேண்டும். எனவே பாக்டீரியல் என முதற்சொல்லை மாற்றப் பரிந்துரைக்கின்றேன்.--செல்வா 00:07, 14 ஆகஸ்ட் 2009 (UTC)