பேச்சு:பகாய் பிரார்த்தனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக் கட்டுரையின் நடையும் கருத்துப்போக்கும் கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றவாறு மாற்றி எழுதுதல் வேண்டும். மேலும் பஃகாய் அல்லது பஃகாஇ என்று எழுதுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.--செல்வா 12:59, 15 மே 2008 (UTC) பிரார்த்தனை என்பது வேண்டுதலா? இங்கு பிரார்த்தனை என்பது எதனைக்குறிக்கிறது? வேண்டுதல்வழிபாடு என்பது பொருந்துமா?--செல்வா 13:02, 15 மே 2008 (UTC)

சற்று பொறுக்க வேண்டும். இது தற்காலிகமே. பஹாய் சமயம் எனும் மூலக்கட்டுரை ஒழுங்குபடுத்தப்பட்டவுடன் இதை இடம் மாற்றிவிடலாம். பிரார்த்தனை என்பது "Prayers". வேறொன்றும் இல்லை. கவலை வேண்டாம். இறைஞ்சல்கள், வேண்டுதல்கள் போன்றவை. வழிபாடு என்பது "Devotional, Worship"--prsamy 09:46, 19 மே 2008 (UTC)

prayers என்பதுதான் இங்கு பொருள் என்றால் வேண்டுதல்கள் என்றே சொல்லலாம். வேள் என்பது வேண், வேட் என்று மாறும் (ள்--> ண்--> ட் தமிழ் முறை). இதிலிருந்தே வேள்வி, வேட்டல், வேண்டுதல் என்னும் சொற்கள் தமிழில் வழங்குகின்றன. பஃகாய் வேண்டுதல்கள் அல்லது பஃஆய் வேண்டுதல்கள் என்பன பொருந்தும் என்று நினைக்கிறேன்.
இக்கட்டுரை விக்கி மூலத்துக்குப் ([1]) பொருத்தமானது. பஹாய் சமயம் கட்டுரையில் விக்கி மூலக் கட்டுரைக்கு உள்ளக இணைப்புத் தரலாம்.--Kanags \பேச்சு 10:29, 19 மே 2008 (UTC)