பேச்சு:ந. சி. கந்தையா பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விருபா, ந.சி.கந்தையா அவரகள் பிறந்த ஊர் நவாலி என்றும் கந்தரோடை என்றும் குறித்திருந்தீர்கள். இரண்டு ஊர்களும் வெவ்வேறு மட்டுமல்ல, அயலூர்களுமல்ல. சரி பார்க்கவும்.--Kanags 12:23, 17 அக்டோபர் 2006 (UTC)

Kanags, எனக்கு இதுதொடர்பாக குழப்பம்தான், ஒரு புத்தகத்தில் நவாலியூர் என்றும் இன்னொரு புத்தகத்தில் கந்தரோடை என்றும் உள்ளது. எனது அனுமானம் என்னவென்றால் அவர் 1893 இல், கந்தரோடையில் பிறந்திருக்க வேண்டும் பின்னர், 1940 களில் அவர் நவாலியில் வசித்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். காரணம் "தமிழர் சரித்திரம்" என்று அவர் எழுதிய புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையின் இறுதியில் தமிழ் நிலையம், நவாலியூர், 1939.03.05. என்று அவரது கையொப்பம் உள்ளது. இரண்டாவதாக அவரது அனைத்துப் புத்தகங்களும் சென்னையிலேயே வெளியிடப்பட்டுள்ளன, "இதன் காரணமாகவே ந.சி.கந்தையா பிள்ளைதமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படும் அளவு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்வதாக" பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் 2003 இல் வெளியா புத்தகங்களுக்குரிய நூலறிமுகவுரையில் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே நான் இரண்டு இடங்களையும் குறித்திருந்தேன், சரியான தகவலைத் தெரிந்தவர்கள் திருத்தட்டும் என்று.--விருபா 17:59, 17 அக்டோபர் 2006 (UTC)

விருபா, கந்தையாபிள்ளை பிறந்தது கந்தரோடை, திருமணம் புரிந்து வாழ்ந்தது நவாலியூரில். எனவே அவர் நவாலியூர் கந்தையாபிள்ளை என்றே வழங்கப்பட்டார்.--Kanags 12:13, 18 அக்டோபர் 2006 (UTC)