பேச்சு:நோர்வே மொழி விக்கிப்பீடியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்ன காரணமாக நோர்வேயன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறியலாமா?--கலை 22:12, 12 ஏப்ரல் 2011 (UTC)

நோர்வே மொழியில் உள்ள இரண்டு விக்கிகளையும் குறிக்கும் பக்கம் என்பதால் நோர்வேயன் என குறித்தேன். ஏதேனும் தவறு உள்ளதா? --அராபத்* عرفات 10:13, 14 ஏப்ரல் 2011 (UTC)
தவறெல்லாம் எதுவுமில்லை. ஏதாவது காரணத்துடன் வைக்கப்பட்ட பெயரா என அறியவே கேட்டேன். நோர்வேயன் என்பது ஏதோ பொருத்தமற்ற சொல் போன்ற ஒரு தோற்றத்தைத் தருவதனால் கேட்டேன். நோர்வே மொழியில் நொர்ஸ்க் விக்கிப்பீடியா (Norsk Wikipedia) என்கின்றார்கள். ஆங்கிலத்தில் நோர்வேஜியன் விக்கிப்பீடியா (Norwegian Wikipedia) என்கின்றார்கள். அதையே தமிழில் எவ்வாறு குறிப்பிடலாம் என யோசிக்கிறேன். Norsk ஐ நாம் நோர்வே மொழி என்றே குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருப்பதால், நோர்வேயன் விக்கிப்பீடியா என்பதற்குப் பதிலாக நோர்வே மொழி விக்கிப்பீடியா என்றே குறிப்பிடுவோமா? சுவீடிய மொழியில் 'நொர்ஸ்க் மொழி விக்கிப்பீடியா' (Norskspråkiga Wikipedia) என்று கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு சரியெனத் தோன்றினால் தலைப்பை நோர்வே மொழி விக்கிப்பீடியா என்று மாற்றலாம்.--கலை 11:21, 14 ஏப்ரல் 2011 (UTC)
எந்த தடையும் இல்லை. எது சரியோ அப்படியே மாற்றி விடுங்கள்.--அராபத்* عرفات 12:00, 14 ஏப்ரல் 2011 (UTC)