பேச்சு:நேரியல் சார்பின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png நேரியல் சார்பின்மை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

தமிழ்ச்சொல்லாக்க நிபுணர்களுக்கு சில கேள்விகள்[தொகு]

1. கட்டுரையில் முதல் வரி: 'சார்புடமை', 'சார்புடைமை' இவையிரண்டில் எது சரி?

2. கட்டுரையில் இரண்டாவது வரி: 'சார்புடைத்தது'. இச்சொல்லிலோ அதைப்பயன்படுத்திய விதத்திலோ இலக்கணப்பிழை ஏதாவது இருக்கிறதா?

3. ஆங்கிலத்தில் கணிதத்தில் 'iff' என்ற சொல்வழக்கு மிகவும் பயன்படுத்தப்படும் சொல். அது 'if and only if' என்ற சொற்களின் சுருக்கம். இதன் பொருள் உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன். அதே வழக்கை நான் தமிழில் எழுதியிருக்கும் நடையை, கட்டுரையில், மூன்றவாது உட்பிரிவில் ('இதர பண்புகள்' என்ற பிரிவு) பார்க்கலாம். "இருந்தால், இருந்தால்தான்". இதைவிட வேறுவிதமாகச் சொல்லமுடியுமா? சொல்லவேண்டுமா? சொல்லலாமா?

4. ஆங்கிலத்தில் (இதர மொழிகளிலும்: French, German) கணிதத்தில், அடிக்கடி பயன்படுத்தப்படும் நடை: "Let us take an arbitrary vector, say, uk" இந்த 'say' என்ற பிரயோகம் வகுப்பில் நாம் ஆசிரியத்தொழிலைச் செய்யும்போதும் அடிக்கடி பயன்படுத்தப்படுவதுண்டு. இதற்கு ஒத்தாற்போல் நான் "இதர பண்புகள்" என்ற மூன்றாவது உட்பிரிவில், ஆறாவது பண்பைப்பற்றிச் சொல்லும்போது என்னையும் அறியாமல் "uk என்று சொல்லலாமே" என்று தட்டச்சு செய்தபிறகுதான் உணர்ந்தேன், இது நல்ல சொல்லாக்கம் என்று. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது சரியென்றால் இதை அடிக்கடி பயன்படுத்தும் தேவை உள்ளது.

5. 'span' = அளாவல், என்று தமிழ் இணையம் சொல்கிறது. நான் 'வீச்சு' என்று பெயர் உண்டாக்கியிருக்கிறேன். 2வது உட்பிரிவு பார்க்கவும். Any comments?

கணிதத்தில் சொற்களை ஆளும் விதத்தில் நல்ல முன்மாதிரிகளை த.வி. தந்துவிடவேண்டும் என்ற அக்கரையினால் இதையெல்லாம் எழுதுகிறேன் என்று புரிந்துகொள்ளவும்.

--Profvk 21:48, 13 ஜூன் 2007 (UTC)

நான் நிபுணன் என்று கூறுவதற்கு இல்லை ஆனால் முதல் நினைப்பில் தோன்றும் என் எண்ணங்கள்:

1) சார்புடைமை என்பதுதான் சரி (சார்பு + உடைமை) 2) படித்துவிட்டு பின்னர் கூறுகிறேன் 3)iff என்பதற்கு "இருந்தால் மட்டுமே" என்பது சரியாக இருக்கும். If என்பதற்கு "இருந்தால் மட்டும்". Iff என்பதற்கு தமிழ் ஏகாரம் துணை செய்யும். 4) uk என்று கொள்வோம் என்பதே போதும். (மீண்டும் படித்துவிட்டு கூறுகிறேன்) 5) வீச்சு என்பது Amplitude என்னும் பொருள் தரும் ஆனால் Span என்பதற்கும் பயன் படுத்தலாம். அளாவல் என்பதை விட வீச்சு என்பது நல்ல சொல். வேறு சொற்களும் இடத்திற்கு ஏற்ப கொள்ளலாம். அகல் என்பது ஒரு சொல். பரட்சி, விரி, விரிப்பு, ஏப்பாடு என்று பல சொற்கள் உண்டு. ஏப்பாடு என்பது ஒரு அம்பை எறியும் பொழுது அம்பு விழும் Range என்பதைக் குறிக்கும் ஒரு அருமையான கலைச்சொல்.

கணிதத்தில் ஆளும் சொற்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்ற உங்கள் கருத்து மிகவும் முக்கியமானது. மிகச் சிறந்த குறிக்கோள். உங்களைப்போன்ற துறையறிஞர் அக்கரையுடன் வந்து செய்வது பெரும் நல்வாய்ப்பு.--செல்வா 22:49, 13 ஜூன் 2007 (UTC)


2) சார்புடைத்து அல்லது சார்புடையது என்று இருத்தல் வேண்டும். சார்புடைத்தது என்பது சரியில்லை. சார்புடைத்தது என்றால் இருந்த சார்பை பிளந்தது என்று பொருள் வந்துவிடும்.--செல்வா 22:53, 13 ஜூன் 2007 (UTC)

செல்வா, நன்றி. 'சார்புடைத்தது' திருத்தப்பட்டது.

--Profvk 12:19, 14 ஜூன் 2007 (UTC)

if and only if[தொகு]

செல்வா, கணிதத்தில் துல்லியம் தேவை.'இருந்தால் மட்டுமே' போதாது. கீழே உதாரணங்களைப்பார்க்கவும்.

வாக்கியம் #1. அவர் தஞ்சையில் பிறந்தார்.

வாக்கியம் #2. அவர் இந்தியாவில் பிறந்தவர்.

வாக்கியம் #1 உண்மையானால், #2ம் உண்மை. (if)

வாக்கியம் #2 உண்மையானால், #1 இன் உண்மையைப்பற்றி ஒன்றும் சொல்லமுடியாது.

வாக்கியம் #2 உண்மையானால் மட்டுமே #1ம் உண்மையாக இருக்கமுடியும். (only if)

மாற்று முறையில் சொன்னால், #2 உண்மையானாலன்றி, #1 உண்மையாக இருக்க முடியாது.

இதனால், if and only if க்கு 'இருந்தால், இருந்தால் மட்டுமே' இரண்டும் வேண்டும்.

--Profvk 13:05, 14 ஜூன் 2007 (UTC)

நீங்கள் கீழ்க்காணுமாறு கூறுவதைக் கொண்டே,

"வாக்கியம் #2 உண்மையானால், #1 இன் உண்மையைப்பற்றி ஒன்றும் சொல்லமுடியாது.

வாக்கியம் #2 உண்மையானால் மட்டுமே #1ம் உண்மையாக இருக்கமுடியும். (only if) "

ஏகாரம் தரும் if and only if ஐ உணரலாம். எனக்கு இருந்தால் மட்டுமே என்பது மிகச் சரியாகப் படுகின்றது. இருந்தால் ஒரு நிலை. இருந்தால் மட்டும் என்பதே போதிய பொருள் தருவது. இருந்தால் மட்டுமே என்பது முழு வலு தரும் if and only if. --செல்வா 13:29, 14 ஜூன் 2007 (UTC)

நேரியல்: Linear vs Direct[தொகு]

நேரியல் என்பதை linear என்ற பொருளிலேயே பயன்படுத்துகின்றீர்கள். அப்படியென்றால் direct என்பதற்கு என்ன தமிழ்ச் சொல்? கணிதத்தில் directly proportional என்பதை எப்படி சொல்லாம்? கீழே இராம.கி பரிந்துரைகள்:

  • இழுனிய செயலாக்கம் (linear process)
  • இழுனாச் செயலாக்கம் (non-linear process)
  • நேரிய செயலாக்கம் (direct process)
  • நேரிலாச் செயலாக்கம் (indirect process)

--Natkeeran 01:37, 14 ஜூன் 2007 (UTC)

இழுனிய என்ற சொல்லின் விளக்கம் தரமுடியுமா?

direct என்ற சொல்லுக்கு'நேர்', 'நேரான' என்ற சொற்களே போதுமானது. --Profvk 11:29, 14 ஜூன் 2007 (UTC)

நற்கீரன், இராம.கி யின் பரிந்துரையாகிய இழுனிய என்பது பொருந்தாது. நேரியல் என்பதுதான் சரி. direct என்பதற்கு நேரடி, நேரடியான என்றும் indirect என்பதற்கு மாற்றுவழி (நேரடியற்ற, நேர்வழியற்ற) என்று கூறலாம். Linear என்பதற்கு ஒலிப்பியல் படி நெருக்கமாக இருப்பதால் இராம.கி அவர்கள் இழுனிய (ilunia)என்பதைப் பரிந்துரைத்துள்ளார். Linear என்ன்னும் சொல்லோடு உள்ள தொடர்பைக் காட்ட. Line என்பதற்கு கோடு என்றும் staraight line என்பதர்கு நேர்கோடு என்றும் பயன்படுத்துகிறோம். இப்பொழுது இழுனிய கோடு என்றா அழைக்கப்போகிறோம். Non-linear என்பதற்கு நேரியலற்ற, நேரற்றவியல், நேரிலா என்றெல்லாம் கூறலாம். இழுனிய என்னும் சொல் நேர் என்னும் கருத்தைக் குறிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இழுனிய என்பது நேரிலா என்னும் பொருள் தரும் !! இழுனிய என்றால் விலகிய என்று பொருள் (பாதையில் இருந்து வழுவிய, விலகிய என்னும் பொருள்.--செல்வா 13:09, 14 ஜூன் 2007 (UTC)

பேரா.வி.கே கூறுவதுபோல direct என்பதற்கு 'நேர்', 'நேரான' என்ற சொற்களே போதுமானது.--செல்வா 13:11, 14 ஜூன் 2007 (UTC)