பேச்சு:நேபாள மன்னர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: இக்கட்டுரையில் உள்ளபடி ”நேபாள மன்னர்” அல்லது ”சிறீ மகாஇராஜாதிராஜா” என்பது நேபாள இராச்சியத்தை ஆண்ட ஷா வம்ச அரசர்களுக்குரிய பெயர் என்பதால் கட்டுரையின் தலைப்பை ”நேபாள மன்னர்” என மாற்றுவது பொருத்தமாக இருக்கும். கட்டுரையினுள் வாசிக்காமல் பார்க்கும்போது ”நேபாள மன்னர்கள்” என்பது, ஷா அரசர்களுக்கு மட்டுமானது என்ற தெளிவு இல்லாமல் நேபாளத்தை ஆண்ட எல்லா அரசர்களுக்குமானது போலத் தோற்றம் தருகிறது. ”நேபாள மன்னர்” என்று தலைப்பை மாற்றினால் கட்டுரையை “நேபாள மன்னர்கள்” என்ற பகுப்பிற்கு முதன்மைக் கட்டுரையாகக் குறிப்பதற்கும் வசதியாக இருக்கும். உங்களது கருத்தினைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:25, 17 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

@Booradleyp1: கிராதர்கள், லிச்சாவிகள் மற்றும் மல்ல வம்ச மன்னர்கள் தற்கால நேபாளத்தின் ஒரு பகுதியை மட்டும் ஆண்டனர். ஆனால் ஷா வம்ச மன்னர்கள் ஒருங்கிணைந்த, தற்போதுள்ள நேபாளப் பகுதிகளை ஆண்டவர்கள். எனவே இவர்களை நேபாள மன்னர்கள் என குறிப்பிட வேண்டும். நன்றி.--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு), 05:53, 17 டிசம்பர் 2017

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: ஷா வம்ச அரசர்கள் மட்டுமே ஸ்ரீ மகாராஜாதிராஜா (நேபாள மன்னர்) என்ற பட்டத்துடன் நேபாள இராச்சியத்தை ஆண்டவர்கள் என்பதால் அவர்கள் தான் ”நேபாள மன்னர்கள்” என்று குறிப்பிடப்படுகிறார்கள் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இக்கட்டுரையின் தலைப்பு பன்மையில் “நேபாள மன்னர்கள்” என இருக்கும்போது, முதற்பார்வையில் அது நேபாளத்தை ஆண்ட பிற அரசர்களையும் குறிப்பது போலத் தோன்றுகிறது. அதனால்தான் தலைப்பை மாற்றக் கேட்டேன். இப்பொழுது உள்ளபடியே இருக்கட்டும் என்றாலும் எனக்கும் உடன்பாடே. நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:20, 17 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நேபாள_மன்னர்கள்&oldid=2458555" இலிருந்து மீள்விக்கப்பட்டது