பேச்சு:நூறு வருட மட்டுநகர் நினைவுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் குறிப்பிடத்தக்கமை குறித்து இங்கு குறிப்பிட்டால் அது தொடர்பில் கவனமெடுக்கப்படும் அல்லது. வார்ப்புரு நீக்கப்படும். --AntanO (பேச்சு) 01:55, 26 மே 2019 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) இன் இல. 1 மற்றும் இல. 3 அகியவற்றின்படி குறிப்பிடத்தக்கதாகவுள்ளது. மேலும் திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் "தொண்டன்" மற்றும் திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்ட சிறப்பிதழிலும் இந்நூலின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையெனின் இணைக்கலாம். --AntanO (பேச்சு) 02:58, 26 மே 2019 (UTC)[பதிலளி]
//தேவையெனின் இணைக்கலாம்.// நீங்கள் குறிப்பிட்ட சிறப்பிதழ்களில் கத்தோலிக்கம் சாராத பொதுவான சிறப்புகள் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டும் தாருங்கள். வேறு நடுநிலையான ஊடகங்களில் அல்லது அச்சு இதழ்களில் இது குறித்து வெளிவந்திருந்தால் தாருங்கள். வார்ப்புரு சேர்த்தவரே கட்டுரைத் திருத்தத்தைக் கவனித்து வார்ப்புருவை நீக்குவது நல்லது. அதுவே தகுந்தது. @Parvathisri:--Kanags \உரையாடுக 03:08, 26 மே 2019 (UTC)[பதிலளி]
காண்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) இல. 3. (குறிப்பிடத்தகுந்த திரைப்படத்திற்கோ கலைப்படைப்பிற்கோ நிகழ்விற்கோ அரசியல் அல்லது சமய இயக்கத்திற்கோ சிறப்பாக பங்களித்துள்ளதாக நம்பத்தகுந்த மூலங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.). //வார்ப்புரு சேர்த்தவரே கட்டுரைத் திருத்தத்தைக் கவனித்து வார்ப்புருவை நீக்குவது நல்லது.// இதுதான் நடைமுறையா? --AntanO (பேச்சு) 03:14, 26 மே 2019 (UTC)[பதிலளி]
நல்லது என்றுதான் கூறினேன். கட்டாயம் என்று கூறவில்லை. //வார்ப்புரு நீக்கப்படும்// எனக் குறிப்பிட்டீர்கள். கட்டுரையாளரே நீக்குவது சரியானதா? அது நடுநிலையாக இருக்குமா? அவ்வாறு சரியென்றால் அதனை எழுத்தில் எழுதிக் கொள்கைகளில் சேர்க்க வேண்டும். ஏனெனில், இவ்வாறான வார்ப்புருக்களை கட்டுரையாளர்கள் நீக்கியபோது அவற்றை மீள்விப்பதில் முன்னுக்கு நின்றவர் நீங்கள். அது தான் சரியான நடைமுறை என்பதை நீங்களும் அறிவீர்கள், மற்றவர்களும் அறிவர்..--Kanags \உரையாடுக 03:23, 26 மே 2019 (UTC)[பதிலளி]
கட்டுரையில் சிக்கல் தீர்ந்தால், யாரும் நீக்கலாம். இப்போது கட்டுரையில் சிக்கல் இல்லை. நான் எவ்வாறான சந்தர்ப்பங்களில் நீக்கினேன் என்பதை அறிந்து குறிப்பிடுதல் நல்லது. --AntanO (பேச்சு) 03:42, 26 மே 2019 (UTC)[பதிலளி]
மூன்றாவதில் தரப்பட்டுள்ள சமய சம்பந்தமான அறிவுறுத்தல் இக்கட்டுரைக்குப் பொருந்தாது. ஏனெனில், இக்கட்டுரை எழுதிய நீங்கள் //இது ஒரு கத்தோலிக்க நினைவுகளைக் கூறும் நூலாக இருந்தபோதிலும், நூறு ஆண்டு காலத்தில் இலங்கையின் மட்டக்களப்பில் ஏற்பட்ட நிகழ்வுகள், கல்வி நிலை, சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் என்பன இந்நூலில் காணக்கிடைக்கின்றன.// எனக் குறிப்பிடத்தக்கமையை சமயத்துக்குத் தரவில்லை. நான் தடித்த எழுத்தில் தந்துள்ள பகுதிகள் தான் முக்கியத்துவம் பெறுகின்றன.--Kanags \உரையாடுக 03:23, 26 மே 2019 (UTC)[பதிலளி]
சமய நூலில் மேலதிகமாக சமூக விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆனால் இது முக்கிய சமய வரலாற்று நூலாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. --AntanO (பேச்சு) 03:28, 26 மே 2019 (UTC)[பதிலளி]
//இது ஒரு கத்தோலிக்க நினைவுகளைக் கூறும் நூலாக இருந்தபோதிலும்,// என நீங்கள் எழுதியிருப்பதன் நோக்கம் என்ன? சமய நூல் என்பது இங்கு முக்கியம் அல்ல, ஆனால், அதைக் காட்டிலும், வேறு தகவல்களே இதனை முக்கியத்துவப்படுத்துகிறது எனப் பொருள் தராதா? சமயம் சார்ந்த நூல் என்பதாலும் இது முக்கியத்துவம் பெறுகிரதென்றால் என்றால் அதனையும் குறிப்பிடுங்கள். அவ்வளவு தான்.--Kanags \உரையாடுக 04:19, 26 மே 2019 (UTC)[பதிலளி]
//:கட்டுரையில் சிக்கல் தீர்ந்தால், யாரும் நீக்கலாம்.// அப்படியானால் சரி. கட்டுரையாளருக்கு அவரது பார்வையில் அது சரி என்று தெரிந்தால் நீக்கலாம் என்கிறீர்கள். நான் உங்களை அச்சுறுத்துவதாக ஏற்கெனவே உங்கள் பயனர் பக்கத்தில் மிகத் தெளிவாகப் பதிந்து வைத்துள்ளீர்கள். எனவே நான் விலகிக் கொள்கிறேன். நீங்களும் உங்கள் கட்டுரைகளும்.--Kanags \உரையாடுக 04:19, 26 மே 2019 (UTC)[பதிலளி]
உங்களுக்கு இங்கு என்ன சிக்கல்? எப்படியாவது இங்கு குற்றம் காண வேண்டும் என்று முயல்கிறீர்களா? ஏரணமாக உரையாடலாம். ஆனால் கட்டுரை தொடர்பாக யதார்த்தமான உரையாடல் அமைந்தால் சிறப்பு. கட்டுரைக்கு வௌியில் உரையாட விரும்பாததால் தேவையற்ற விவாதத்தைத் தவிர்க்கிறேன். --AntanO (பேச்சு) 04:28, 26 மே 2019 (UTC)[பதிலளி]