பேச்சு:நுளம்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழத் தமிழில் இது ஆளைப் படிக்கும் கொசுவைக் குறிக்கவும் பயன்படுகிறது. நானறிந்த வகையில் அவ்வாறு இல்லை. --Anton (பேச்சு) 03:23, 30 சனவரி 2013 (UTC)[பதிலளி]

படிக்கும் அல்ல கடிக்கும் என இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நுளம்பு இலங்கையில் அதனையே குறிக்கும்.--Kanags \உரையாடுக 07:53, 30 சனவரி 2013 (UTC)[பதிலளி]

அன்புள்ள அண்டன், நான் உழவன். மாடு வைத்திருந்தவன். மாட்டைக் கடிக்கும் ஈயைப் பார்த்தவன். இதனைச் சங்கப்பாடல் குறிப்பிட்டிருப்பதையும் காட்டியிருக்குறேன்.

  • எண்ணெய் என்பது எள் நெய். இன்று அதன் பொருள் மாறியுள்ளது. கடலைநெய் என்னாமல் கடலை எண்ணெய் என வழங்கப்படுகிறது. இதற்குப் பெயர்தான் சொற்பொருள் மாற்றம். அல்லது சொற்பொருள் ஏற்றம் semantics.
  • இப்படி நுளம்பு என்னும் சொல் மாட்டைக் கடிக்கும் சங்ககால வழக்குநிலை மாறி மனிதனைக் கடிக்கும் ஈழத்தமிழுக்கு மாறியுள்ளது. தமிழ்நாட்டில் வழக்கற்றுப்போன நுளம்பு என்னும் சொல் ஈழத்தில் வழங்கிவருவது பழந்தமிழுக்கும் ஈழத்துக்கும் பெருமை.
  • பழந்தமிழை மறைத்துவிட்டு ஈழத்தமிழைக் காக்கும் பணியை, ஈழத்துத் தமிழி கல்வெட்டு கண்ட பெருந்தகை செய்வது தகுமா?
  • தங்கள் பேச்சில் நுளம்பு (மாட்டைக் கடிக்கும் ஈ) தலைப்புக்கு மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் நுளம்பு கட்டுரையைக் கொசுத் தலைப்புக்கு மாற்றியுள்ளீர்கள். விளங்கவில்லை. போகட்டும்.
  • நுளம்பு, கொசு ஆகிய கட்டுரைகள் தனித்தனியாக இருக்கட்டும். வேண்டிய குறுக்கு இணைப்புகள் தரலாம். சங்கத்தமிழைத் தலைநிமிர விடுங்கள்.
  • எது முந்தியது? சங்கத்தமிழா, ஈழவழக்கா என எண்ணிப் பாருங்கள்.
  • தாங்கள் பேசியிருக்கலாம். பேசவில்லை. போகட்டும். நடுவுநிலைமையைக் கையாண்டு பெருந்தன்மையோடு தாங்களே இதனைச் செய்வது சாலச் சிறந்தது.
  • இணையதளத்தில் ஈழத்தமிழர்களின் தமிழ்த்தொண்டு ஈடு இணை இல்லாதது. இதனைக் கட்டிக் காப்பாற்றுங்கள்.

அன்புள்ள. --Sengai Podhuvan (பேச்சு) 21:12, 30 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பொதுவன் ஐயாவின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். இக்கட்டுரையின் தலைப்பை நுளம்பு என மாற்ற வேண்டும்.--Kanags \உரையாடுக 01:45, 31 சனவரி 2013 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று உங்கள் பேச்சுப் பக்கத்தில் என் கருத்தை இட்டுள்ளேன். --Anton (பேச்சு) 02:28, 31 சனவரி 2013 (UTC)[பதிலளி]
நுளம்பு என்ற சொல் புதுக்கோட்டையில் உள்ள எங்கள் ஊரில் இன்றும் வழக்கில் உள்ளது. பொதுவாக கடிக்கும் கொசுவை விடப் பெரிதாக இருக்கும். அது மாட்டையும் கடிக்குமா என்று அடுத்த முறை ஊருக்குப் போகும் போது அதனிடம் கேட்டுச் சொல்கிறேன் ;)--இரவி (பேச்சு) 09:14, 31 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்ற வேண்டுகோள்[தொகு]

கட்டுரை பற்றிய விவாதம் முடிவுற்ற பின் மீண்டும் கேள்வி கேட்பதற்கு மன்னிக்கவும். ஈழ வழக்கில் நுளம்பு என்பது தமிழ்நாட்டில் கொசுவைக் குறிக்கப் பயன்படுகின்றது. இப்பயன்பாடு நீண்டகாலமாயுள்ளது. கொசு மாட்டையும் கடிக்கும். ஆனால் இக்கட்டுரை Abricta curvicosta வை நுளம்பு தான் என விபரிக்க முற்படுகின்றது. இதற்கு சங்கப்பாடல் ஒன்றில் நுளம்பு மாட்டைக் கடித்ததை ஆதாரமகக் காட்டுகின்றோம். இதற்கு இடையில் நுளம்பு எனும் சொல் பயன்பாடு பற்றி முழுமையாக ஆராயாமல் எப்படி அது மாட்டைக் கடிக்கும் ஈயே தான் எனக் கூறுவது. Abricta curvicosta வை நானும் மாட்டுத் தொழுவங்களில் கண்டிருக்கின்றேன். அத்துடன் பொதுவாக ஈ பகல் நாட்டம் கொண்டது. ஆனால் நுளம்பு சங்கப் பாடலில் நள்ளிரவில் மாட்டைக் கடிக்கின்றது. அறிவியல் சார்ந்த மற்றைய விடயங்களையும் கருதி ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. சங்கப்பாடலில் இருந்து நுளம்பு மாட்டையும் கடிக்கும் இரவு நாட்டமுள்ள அங்கி என்பது மட்டும் தெளிவு. சிலவகை நுளம்புகள் மாட்டையும் கடிக்கும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:56, 1 பெப்ரவரி 2013 (UTC)

தகவல்[தொகு]

கட்டுரையில் தரப்பட்டிருக்கும் படம் நுளம்பு தானா? இதன் அறிவியல் பெயரும் சரியாகத் தரப்பட்டுள்ளதா? ஆங்கில விக்கியில் இது ஆத்திரேலியாவுக்கு உரிய விலங்கினம் எனத் தரப்பட்டிருக்கிறது.--Kanags \உரையாடுக 07:31, 31 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தமிழகத்தில் பொதுவாக மாட்டைக் கடிக்கும் ஈ உண்ணீ எனப்படுகிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:42, 27 ஏப்ரல் 2013 (UTC)

உண்ணி வேறு நுளம்பு வேறு.--112.134.234.35 02:16, 23 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நுளம்பு&oldid=3051276" இலிருந்து மீள்விக்கப்பட்டது