பேச்சு:நீலகிரி வரையாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலகிரி வரையாடு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia



நீலகிரி வரையாடு என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

//வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்காகும்// - இது நான் அறிந்திராதது. நன்றி. இது போல் மாநில மலர், பறவை என்றெல்லாம் உள்ளதா? அவற்றைப் பட்டியலிட்டு ஒரு கட்டுரை எழுதலாம்.--ரவி 15:50, 6 ஜூலை 2008 (UTC)

ஆம் ரவி,

மலர்: செங்காந்தல் மலர் Gloriosa Lily (Gloriosa superba) விலங்கு: வரையாடு Niligiri Tahr (Nilgiritragus hylocrius) மரம்: பனை மரம் Palm Tree (Borassus flabellifer) பறவை: மரகதப் புறா/பஞ்சவர்ணப் புறா Emerald Dove (Chalcophaps indica) --கார்த்திக் 13:58, 10 ஜூலை 2008 (UTC)

தகவலுக்கு நன்றி, கார்த்தி--ரவி 21:57, 10 ஜூலை 2008 (UTC)


எத்தினையோ பூக்கள் இருக்க. தமிழாக்களுக்கு இந்த en:Gloriosa (genus) மீது அப்பிடி என்ன தொடர்பு. அந்தப் பூ வகைதான் தமிழீழ தேசிய மலரும். Lily நஞ்சு வகை இல்லையா? --Natkeeran 22:10, 10 ஜூலை 2008 (UTC)

செங்காந்தல் மலர்க்கு கார்த்திகை பூ என்றொரு பெயருமுண்டு!

நற்கீரன் - எனக்கும் தெரியவில்லை கண்டுபிடிக்கிறேன். --கார்த்திக் 02:50, 11 ஜூலை 2008 (UTC)

அல்லி மலர்கள் நெய்தல் நிலத்திற்கு உரித்தானவை என்று வடக்கன் இங்கு குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. -- சுந்தர் \பேச்சு 07:40, 12 ஜூலை 2008 (UTC)
  • விருத்தி வரலாறு ? வியத்தி வரலாறு --Natkeeran 12:48, 12 ஜூலை 2008 (UTC)

விருத்தி வரலாறுதான் (http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=Ontogeny&OptSearch=Full&id=All&text2=&text1=&link=http%3A%2F%2Fwww.tamilvu.org%2Flibrary%2Fo33%2Fhtml%2Fo3300001.htm&cat=null&book=null) --கார்த்திக் 13:06, 12 ஜூலை 2008 (UTC)

ஆண், பெண் ஆடு[தொகு]

கிடா, பெட்டை என்பன ஆண், பெண் ஆடுகளுக்கு வழங்கப்படும் பெயர்கள் அல்லவா? இச்சொற்களைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன்.--சிவகுமார் \பேச்சு 14:54, 15 ஜூலை 2008 (UTC)

கிடா - கடா என்று ஆண் மாட்டைக் குறிக்கலாம். கிடாய் என்பது ஆண் ஆட்டைக் குறிக்கும். எங்கள் ஊரில் பெண் ஆட்டைப் பிருவை என்பார்கள். ஆனால், அகரமுதலியில் பிருவை, பிரியை, பிரிவை என்று எப்படித் தேடினாலும் சிக்க மாட்டேன் என்கிறது--ரவி 15:28, 15 ஜூலை 2008 (UTC)

அம்புலிமாமா கட்டுரை[தொகு]

சிவா அண்மையில் இணைத்துள்ள அம்புலிமாமா கட்டுரையைப் பார்த்தால் படமும் பல தகவல்களும் தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது. தமிழ் விக்கிக்குச் சுட்டி எதையும் காணோம். :-( -- சுந்தர் \பேச்சு 10:19, 3 செப்டெம்பர் 2009 (UTC)

நமது பெயரும் தொடுப்பும் மட்டும் தந்தார்கள் என்றால் இந்த போக்கு மகிழத்தக்கது தான். புதிய தகவல்கள் நல்ல தமிழில் பல வாசகர்களைச் சென்றடையும். விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் ஊடகங்கள் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு, முறையாக பெயர் குறிப்பிடுகிறார்களா, இது குறித்து அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளோமா என ஆவணப்படுத்தலாம். அம்புலிமாமா ஆசிரியருக்கு கீழ்க்கண்டவாறு ஒரு மின்மடல் அனுப்பியுள்ளேன். இணையத்தில், அச்சில், ஒலி / ஒளி ஊடகங்களில் எவர் நம்முடைய ஆக்கங்களை பெயர் குறிப்பிடாமல் பயன்படுத்தினாலும் பின் வருமாறு ஒரு வேண்டுகோள் அனுப்பி வைக்கலாம்.

Dear Editor,

We are contributors from Tamil Wikipedia.

We are glad to see use of info or pictures from Tamil Wikipedia in your Tamil edition Ambulimama.

For example,


are based on info from Tamil Wikipedia.


We focus on articles of interest for Tamil kids and school children. Getting our articles published in print media like yours will help us reach more people. So, we are really thankful for publishing articles from Wikipedia and request you to continue this. Please let us know if there are particular areas where we can improve, make it easy for the kids to read.

Since Tamil Wikipedia is a non-profit volunteer effort, we would appreciate if you could mention and link to Tamil Wikipedia wherever appropriate both in print and web. Besides following the copyright guidelines, this will also introduce the kids to using Wikipedia themselves.

Thank you,

Regards,

பார்க்க: பேச்சு:செப்டம்பர் 1. [1]--Kanags \பேச்சு 11:57, 3 செப்டெம்பர் 2009 (UTC)

கனகு, செப்டம்பர் 1 பக்கத்தையும் கவனித்த பிறகே ஆசிரியருக்கு மடல் அனுப்பினேன். இனி, உரிய முறையில் பெயர் தெரிவித்து எழுதுவதாக அம்புலிமாமா ஆசிரியர் பதில் அனுப்பி உள்ளார். அவர் அனுப்பிய பதில் கீழே:

சுந்தர், எந்தெந்த வலைத்தளங்களில் தமிழ் விக்கி கட்டுரைகள் எடுத்தாளப்படுகின்றன என்று தானியக்கமாகச் சோதிப்பதற்கு ஏதும் கருவிகள் உள்ளனவா? தொடர்ந்து உரிய முறையில் பெயர் தெரிவிக்காமல் யாராவது விக்கி கட்டுரைகளை எடுத்தாண்டால், அவர்களுக்கு மேற்கண்டவாறு வேண்டுகோள் மடல்கள் அனுப்பி வைக்கலாம்.--ரவி 06:16, 5 செப்டெம்பர் 2009 (UTC)

உடனடியாகத் தெரியவில்லை. பார்த்துச் சொல்கிறேன். -- சுந்தர் \பேச்சு 04:12, 6 செப்டெம்பர் 2009 (UTC)

பெயர் மாற்றம்[தொகு]

வரையாடுகள் என்பது பொது(Subfamily:Caprinae[1] = goat-antelopes). இதில் 3 வகைகள் காணப்படுகின்றன. புதிய விலக்கின வகைப்பாட்டியல் படி அவை வெவ்வேறு பேரினங்களாக( monotypic genera) அறிவிக்கப்பட்டுள்ளன.

  1. Hemitragus jemlahicus (இமாலய வரையாடு)[2]
  2. Nilgiritragus hylocrius (நீலகிரி வரையாடு)[3]
  3. Arabitragus jayakari (அரேபிய வரையாடு)[4]

மேற்கோள்[தொகு]

  1. Theodor, Jessica M. “Artiodactyla (Even-Toed Ungulates Including Sheep and Camels).” In eLS. John Wiley & Sons, Ltd, 2001. http://onlinelibrary.wiley.com.prx.library.gatech.edu/doi/10.1038/npg.els.0001570/abstract.
  2. Himalayan tahr (Hemitragus jemlahicus). Arkive. http://www.arkive.org/himalayan-tahr/hemitragus-jemlahicus/
  3. Ropiquet, A. & Hassanin, A. 2005. Molecular evidence for the polyphyly of the genus Hemitragus (Mammalia, Bovidae). Molecular Phylogenetics and Evolution 36(1):154-168
  4. Ropiquet, A. & Hassanin, A. 2005. Molecular evidence for the polyphyly of the genus Hemitragus (Mammalia, Bovidae). Molecular Phylogenetics and Evolution 36(1):154-168
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீலகிரி_வரையாடு&oldid=1731971" இலிருந்து மீள்விக்கப்பட்டது