பேச்சு:நீர்நில வாழ்வன
Jump to navigation
Jump to search
இலங்கை விஞ்ஞான பாடதிட்டத்தில் இவ் வகையான விலங்கினங்களை ஈருடக வாழிகள் என குறிப்பிடப்படுகின்றது.இதனையும் கருத்தில் கொள்ளவும் --kalanithe
- இதுவும் நல்ல தலைப்புதான். (ஈரூடக வாழிகள்) இதையும் முதல்வரியில் குறிப்பிடலாம். -- Sundar \பேச்சு 07:57, 14 ஜூன் 2006 (UTC)
நிலநீர் வாழ்வன[தொகு]
நில விலங்குகள், நீர் விலங்குகள், நிலநீர் விலங்குகள் என்று வழங்குவது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். நிலம் மேல வாழ்வன நில விலங்குகள் (யானை, புலி எலி). நீரில் வாழ்வன நீர்விலங்குகள் (மீன், திருக்கை, திமிங்கிலம், கடற்குதிரை முதலிய). நிலத்திலும் நீரிலும் வாழ்வன நிலநீர் விலங்குகள் அலது நீர்நில விலங்குகள் ஆகும் (ஆமை, முதலை முதலியன). --C.R.Selvakumar 18:22, 12 ஜூன் 2006 (UTC)செல்வா
- ஆம். அதுவே சரியாக இருக்கும். தலைப்பைப் பார்த்தவுடன் "heteromorphic"[1] என்பதே நினைவிற்கு வந்தது. -- Sundar \பேச்சு 06:07, 13 ஜூன் 2006 (UTC)
- [1] - en:diploid/en:haploid dualism in ferns (en:Alternation of generations)
- சிவகுமார், ஈருடக வாழி என்றால் என்னெவென்றே புரியவில்லை. இரு + ஊடக + வாழி என்றால், ஈரூடக வாழிகள் என்று இருத்தல் வேண்டும். நிலநீர் வாழ்வன, நிலநீர் வாழிகள், நிலநீர் விலங்குகள் என்று ஏதேனும் ஒன்று இருந்தால் நல்லதாக இருக்கும் என நினைக்கிறேன். ஏன் நிலநீர் என்னும் அடிப்படையில் உள்ள சொறகளை வேண்டாம் என கருதுகிறீர்கள்? இச்சொற்கள் இன்னும் தெளிவு பட இருக்குமே?--C.R.Selvakumar 17:40, 26 ஜூலை 2006 (UTC)செல்வா
- செல்வா, ஈரூடக வாழிகள் என்பதை தவறுதலாக ஈருடக வாழிகள் என்று நகர்த்தி விட்டேன். நீர்நில வாழிகள் என்பதற்கு வழிமாற்று கொடுத்துள்ளேன். எனவே வேண்டுமானால் இதனையே முதன்மைத் தலைப்பாகக் கொண்டு ஈரூடக வாழிகள் என்பதை வழிமாற்றி விடலாம். --சிவகுமார் 18:35, 26 ஜூலை 2006 (UTC)