பேச்சு:நிலநடுக் கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலநடுக் கோடு, வடமுனை, தென் முனை ஆகிய சொற்ளை ஆள பரிந்துரைக்கிறேன் (அல்லது பிறைக் குறிகளுக்குள் இட்டுக் காட்ட வேண்டுகிறேன்). நில உருண்டை சுழலும் அச்சு பற்றியும், அது கதிரவனைச் சுற்றிவரும் தளத்தில் இருந்து சாய்ந்து (23 பாகை) இருப்பது பற்றியும், இந்த அச்சின் ஒரு முனையை வட முனை என்றும், எதிர் முனையை தென் முனை என்றும் கூறுகிறோம் என்பது பற்றி கூற வேண்டும் என நினைக்கிறேன். நில உருண்டையின் சுழலும் அச்சுபற்றி கருதப்படும் இவ்விரு முனைகளையும் நிலமுனைகள் என்று கூறுகிறோம். நில உருண்டையைச் சுற்றி காந்தப் புலம் உள்ளது இதன் வட முனையும், சுழல் அச்சின் அடிப்படையில் உள்ள வட முனையும் வெவ்வேறு. இந்த வேறுபாடு பற்றி சீனர்கள் மேற்குலகினர் அறிவதற்கு 900 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். நிலப்பரப்பின் வரைபடம் வரையும் கலை பற்றியும் குறிப்புகள் சேர்க்க வேண்டும். நிங்கள் எண்ணிப்பார்க்க சில கருத்துக்கள், பரிந்துரைகள்.--C.R.Selvakumar 21:26, 20 ஜூன் 2006 (UTC)செல்வா

தலைப்பை நில நடுக்கோடு என்றே இருக்க வேண்டுகிறேன்.--செல்வா 13:47, 5 ஜனவரி 2007 (UTC)

நில நடுக்கோடு என்ற வழிமாற்றி ஏற்கனவே இருக்கிறதே. --கோபி 15:48, 5 ஜனவரி 2007 (UTC)
உண்மைதான் கோபி, ஆனால் கட்டுரையின் தலைப்பு நில நடுக்கோடு என்று இருந்து வழிமாற்றி புவி மையக்கோடு என்று இருப்பதே மேல் என்பது என் கருத்து.--செல்வா 19:13, 5 ஜனவரி 2007 (UTC)
செல்வா, நில நடுக்கோடு என்பதே மிகவும் பொருத்தமான சொல்லாயின், புவிமையக் கோடு என்ற இக்கட்டுரையின் தலைப்பை நில நடுக்கோடு என்று மாற்றுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. Mayooranathan 05:44, 6 ஜனவரி 2007 (UTC)
பூமத்திய ரேகை என்பதை எங்கேயே படித்தாக ஞாபகம். இலங்கைப் பாடப் புத்தகத்தில் உள்ளதோ தெரியவில்லை. --Umapathy 06:07, 6 ஜனவரி 2007 (UTC)
பூமத்திய ரேகை என்பது இலங்கையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல். தமிழ் நாட்டிலும் பயன்படுத்தப்படக் கூடும் என்றே நினைக்கிறேன். ஆனால் இது வடமொழிச் சொல் ஆகையால் நில நடுக்கோடு, புவி மையக்கோடு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. Mayooranathan 06:52, 6 ஜனவரி 2007 (UTC)


நன்றி மயூரநாதன். பக்கத்தை நகர்த்தி இருக்கின்றேன்.--செல்வா 03:24, 7 ஜனவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிலநடுக்_கோடு&oldid=93234" இருந்து மீள்விக்கப்பட்டது