பேச்சு:நிறுவனம் (வணிகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு group (of companies) என்பதற்குப் பொருந்தும். companyக்கு இணையாக நிறுவனம் என்று தலைப்பிடலாம் என பரிந்துரைக்கிறேன். group (of companies) என்பதை நிறுவனக் குழுமம் என குறிப்பிடலாம்.

கட்டுரையே குறுங்கட்டுரை..இதில் என்ன சான்று தேடுகிறீர்கள் ? விதிகளை மட்டுமே நோக்காதீர்கள்...பச்சிளம் குழந்தைகளுக்கு பூட்சு காலணி அணிவித்து துன்புறுத்துவதைப் போல வளரும் தமிழ் விக்கி தானாக நிற்கத் தொடங்கிய பின்னர் விதிகளை அமல்படுத்துவதை கடுமையாக்கலாம். அஞ்சில் வளையாதது அம்பதில் வளையுமா என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது. இருப்பினும் புதுப் பயனர்கள் உள்ளே வரவே தயங்கும் நிலையில் சற்றே நெகிழ்வாக இருத்தலே நல்லது.--மணியன் (பேச்சு) 13:07, 29 மே 2012 (UTC)
பார்க்க விக்கிப்பீடியா:சான்று சேர்க்கும் திட்டம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:40, 30 மே 2012 (UTC)

தினேசு, அங்கைப் புண்ணுக்கு ஆடி தேவையா ? கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள். அருள்கூர்ந்து இது போன்ற கட்டுரைகளுக்கெல்லாம் சான்று தேவை வார்ப்புரு இட வேண்டாம். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 13:17, 29 மே 2012 (UTC)

பார்க்க விக்கிப்பீடியா:சான்று சேர்க்கும் திட்டம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:40, 30 மே 2012 (UTC)