பேச்சு:நிகழ்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காணொளி என்பது பொருத்தமான சொல் அல்ல. ஒளியைக் காணாமல் என் செய்வது? மேலும் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்கள் கொண்ட ஒளி என்றுவேண்டுமானால் பொருள் கொள்ள இடம் உண்டு. ஆகவே Visible spectrum என்பதற்குக் காணொளி என்பது பொருந்தும் என நினைக்கின்றேன். ஆனால் வீடியோ என்னும் நிகழ்படத்துக்குப் பொருந்தாது. நிகழ்படம் அல்லது வேறு பொருத்தமான கலைச்சொல்லைப் பயன்படுத்துவது நல்லது. நிகழ்படம் என்பது பொருத்தமாக எனக்குப் படுகின்றது. இதேபோல ஆடியோ (audio) என்பதற்குக் கேளொலி என்றும் சிலர் பயன்படுத்துகின்றனர். அதுவும் பொருந்தாத சொல் என்பது என் கருத்து. கேளொலி என்பது audible sound, audible spectrum என்பது போல் பொருள் தரலாம். audio-vidio (AV) என்பதை ஒலியொளி என்றும், ஒலியொளிக் கருவிகள் என்றும் கூறலாம். மைக்குரோஃவோன் - ஒலிபற்றி; ஆடியோ ஆம்ப்பிளிஃவையர் - ஒலிமின்மிகைப்பி, ஆம்ப்பிளிஃவயர் - மிகைப்பி; லௌடு இசுப்பீக்கர் - ஒலிபெருக்கி. Sterio amplifier/speaker இணை மிகைப்பி/ஒலிப்பி.

  • எனது சுவையான 100 இணையதளங்கள் எனும் நூலில் சில இடங்களில் வரும் வீடியோ எனும் ஆங்கிலச் சொல்லிற்கு தமிழில் நிகழ்படம் என்றே குறிப்பிட்டுள்ளேன். நிகழ்படம் என்பது பொருத்தமாக உள்ளதால் அதையேப் பயன்படுத்தலாமே...? --தேனி.எம்.சுப்பிரமணி. 00:59, 3 திசம்பர் 2010 (UTC)
நிகழ்படம் என்ற சொல்லே த. விக்கியில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால் நிகழ்படம் என்றே மாற்றி விட்டேன்--சோடாபாட்டில் 05:26, 3 திசம்பர் 2010 (UTC)
நிகழ்படம் என்பது live picture என்பது போல பொருள் அளிக்கிறது. ஆனால் சேமிக்கப்பட்ட பல கோப்புகளில் இறந்த காலக் காட்சிகளை காணலாம் என்பதால் வேறு பொருத்தமான கலைச்சொல் தேவை. அகரமுதலியில் "ஒளிதம்" என்ற சொல்லைக் கையாண்டுள்ளனர். இது பொருத்தமாக உள்ளதாகக் கருதுகிறேன். video என்பதற்கு ஒளிதம் என்றும் audio என்பதற்கு ஒலிதம் என்றும் கூறலாம்.
த.வியிலும் இணையத்திலும் நிகழ்படம் கூடுதலாக பயன்படுத்தப்படுவதால் கட்டுரைத் தலைப்பை உடனடியாக மாற்றத் தேவையில்லை. --மணியன் 04:47, 25 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிகழ்படம்&oldid=726045" இருந்து மீள்விக்கப்பட்டது