பேச்சு:நா. சொக்கன்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் சொக்கனை வாசிக்கும் போது என்னுடைய சொக்கன் போன்றதோர் விளக்கத்தை எனக்கு உடனடியாகத் தந்தது. அனாவசியமாக ஆங்கிலத்தை முன்னொட்டாக வைப்பது தேவையற்றது. பக்கத்தை சொக்கன் என்றோ நாகலிங்கம் சொக்கநாதன் என்கின்ற தலைப்பிற்கு மாற்றினால் நல்லது.--Umapathy (உமாபதி) 08:16, 8 ஆகஸ்ட் 2007 (UTC)

இந்த எழுத்தாளர் பொதுவாக என். சொக்கன் என்று அழைக்கப்பட்டால் அதனையே முதன்மையாக்குவது நல்லது.--Kanags 08:22, 8 ஆகஸ்ட் 2007 (UTC)

தந்தை / தாய் பெயர் அறியப்பெற்ற தமிழர்களுக்குப் பக்கத் தலைப்பையும் தமிழ் முன்னொட்டுகளுடே வைப்பது என்று முன்பு உரையாடினோமே? M.S. சுப்புலட்சுமி பக்கத்தைக் கூட ம. ச. சுப்புலட்சுமி பக்கத்துக்கு மாற்றி இருக்கிறோம். இப்பக்கத்தை நா. சொக்கன் என்ற தலைப்புக்கு நகர்த்தலாம்--ரவி 09:12, 9 ஜூலை 2008 (UTC)

ஒருவரின் பெயரின் முன்னெழுத்துகளின் விரிவு தெளிவாகத் தெரிந்தால், அதனை தமிழில் சுருக்கெழுத்தாக இடுவதே முறை. கட்டுரைக்கு வேறு வகைகளில் வழிமாற்று இருக்கலாம். கட்டுரைக்கு உள்ளும் என். சொக்கன் என்று இவர் அழைக்கப்படுகின்றார் என்றும் கூறலாம். ஆனால் தலைப்பிலும், கட்டுரையிலும் பொதுவாக நா. சொக்கன் என்று எழுதுவதுதான் முறை. எடுத்துக்காட்டாக ம. கோ. இராமச்சந்திரன் என்னும் கட்டுரையையும் காணலாம். ஒருவர் கையெழுத்து இடும்பொழுது அவர் தனக்குப் பிடித்தமாதிரி இடலாம், ஆனால் ஒரு மொழியில் வழங்கும் பொழுது அம்மொழியின் முறைகளின் படித்தான் வழங்க வேண்டும். அதுவும் எழுதும் நூலைப் பொருத்தும் வேறு வேறு வகையாகவும் இருக்கக்கூடும் சில நூல்களில் சொக்கன், நா. என்றுகூட முன்னொட்டு எழுத்துகள் பின்னே இடுவதாகக்கூட இருக்கலாம். இங்கு தமிழ் விக்கிப்பீடியாவில் நா. சொக்கன் என்பது சரியான முறை. என். சொக்கன் என்று தேடுவோருக்கும் இக்கட்டுரை கிட்டும், எனவே அது குறித்து கவலைப்பட வேண்டாம். --செல்வா 12:46, 22 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நா._சொக்கன்&oldid=369096" இருந்து மீள்விக்கப்பட்டது