பேச்சு:நாத்தூராம் கோட்சே
இவர் விடுதலையாகி இன்னமும் உயிருடன் இருக்கிறார் அல்லவா??!! ஆயுள் தண்டனை நிறைவுற்று, விடுதலையாகி வெளி வந்த பின் "நான் நாத்துராம் பேசுகிறேன்" என்னும் ஒரு நாடகமும் எழுதி அண்மையில் நடத்தி வந்தாரே??!! --செல்வா 21:15, 4 ஆகஸ்ட் 2008 (UTC)
Untitled
[தொகு]- இவர் உடனேயே தூக்கிலிடப்பட்டு விட்டார். (கோட்சே எனவே எழுதலாமே)??--Kanags \பேச்சு 21:18, 4 ஆகஸ்ட் 2008 (UTC)
நாதுராம்
[தொகு]மூல மொழி உச்சரிப்பு என்ன? தமிழில் இதுவரை நாதுராம் கோட்சே என்றே வழமையாக எழுதி வருகிறோம்--ரவி 12:46, 5 ஆகஸ்ட் 2008 (UTC)
தலைப்பை மாற்ற தெரியவில்லை. உதவி தேவை. கோட்சே - சரியாகவே இருக்கும். கிரந்த எழுத்து விலக்கலை கவனத்தில் கொள்கிறேன்.
- தலைப்பை மாற்ற, பக்கத்தின் மேல் உள்ள 'நகர்த்துக' என்ற தொடுப்பைப் பயன்படுத்தலாம். கிரந்தம் தவிர்ப்பு என்பதற்காக மட்டும் சொல்லவில்லை. ஏற்கனவே தமிழில் கோட்சே என்றே வழமையாக எழுதப்பட்டு வருகிறது. (கூகுள் முடிவுகள்: கோட்சே - 4500+, கோட்ஸே - 76). இருப்பதைத் தவிர்க்காவிட்டாலும் புது இடங்களில் தேவையின்றி புகுத்த வேண்டாமே. (நீங்கள் வேண்டுமென்று எழுதவில்லை என்பதும் தெரியும் :) :) ) --ரவி 03:27, 7 ஆகஸ்ட் 2008 (UTC)
ரவி, தமிழில் நாதுராம், நாத்துராம் ஆகிய இரண்டுமே சரியான பெயர்ப்பு அல்ல. மராத்தியில் नथूराम என்று இருப்பதால், நாத்தூராம் என்று ஊகார நெடிலுடன் தகரம் வருதல் வேண்டும். மராத்தியில் नादूराम् என்று இருந்தால் நாம் நாதூராம் என்று எழுதலாம். இந்தி, மராத்தி போன்ற மொழிகளில் நாம் வல்லினம் என்று கூறும் க,ச,ட,த,ப என்னும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் நான்கு வேறுபாடுகளுடன் தனித்தனி எழுத்து கொண்டு எழுதுகிறார்கள். எனவே அவர்கள் नातूराम् என்றாலும், नात्तूराम् என்றாலும், नाथूराम् என்றாலும், नाथ्थूराम् என்றாலும் நாம் தமிழில் நாத்தூராம் என்று எழுதுவதே நெருக்கமான ஒலிப்பாக இருக்கும். அதே போல அவர்கள், नादूराम्, नाधूराम्, नाद्दूराम्, नाध्धूराम् என்று எழுதுவதை நாம் நாதூராம் என்று எழுதுதலே நெருக்கமாக அமையும். ஆங்கிலத்தில் Open என்பதைத் தமிழில் ஓப்பன் என்றுதான் எழுதவேண்டும் (ஒலிப்பு நெருக்கம் வேண்டும் எனில்). ஓபன் என்று எழுதினால் Oben என்றுதான் ஒலித்தல் வேண்டும். மாற்றி ஒலிப்பதால் தமிழ் ஒலிப்பின் அடிவேரே அழியும். அமெரிக்க குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் Obama என்பரை ஒபாமா என்று எழுதினால் ஒலிப்பு நெருக்கமாக வரும். Open என்பதும் Oppenheimer என்பதும் தமிழில் ஓப்பன், ஓப்பன்ஹைமர் என்று எழுதினால் (ஒலிப்பு) சற்றேறக்குறைய சரியாக இருக்கும். வேற்றுமொழி ஒலிபுகளை தமிழல்லா ஒலிப்பாகத் துல்லியமாகக் காட்டவேண்டும் என்றால், இந்த ஐந்து எழுத்துக்களுக்கும் ஒலித்திரிபுக்குறிகள் இடுவது பொருந்தும். முன்னர் IAST க்கான பரிந்துரையை இங்கே தந்துள்ளேன். அதனை இன்னும் கூட திருத்தி, ka = க , kha = க: , ga = 'க , gha = 'க: என்பதற்கு மாறாக ka = ''க , kha = ''க: , ga = 'க , gha = 'க: என்று எல்லா எழுத்துக்களுக்கும் ஒலித்திரிபு காட்டலாம். இதன்படி நா''தூ:ராம் 'கோ'ட்˘சே என்று எழுதினால் முழுத்துல்லியம் கிட்டும். பொதுவாக எழுதும்பொழுது நாத்தூராம் கோட்சே என்று எழுதலாம், ஆனால் ஒலிப்புத் துல்லியம் காட்டும் போது மட்டும் நா''தூ:ராம் 'கோ'ட்˘சே என்று எழுதிக்காட்டலாம். --செல்வா 13:17, 7 ஆகஸ்ட் 2008 (UTC)
அண்மையில் Down Town என்னும் சொல் பற்றி ஒரு உரையாடல் நிகழ்ந்துள்ளது. இங்கு டவுன்ட்டௌன் என்று எழுதலா, அதன் தமிழ் ஒலிப்பு tavuntown என்பதாகும். ஒலிப்பு நெருக்கம் வேண்டின் 'டவுன் டௌன் என்று எழுதலாம். தமிழில் முதலெழுத்தாக வரும் வல்லின எழுத்துக்கள் வலித்தே ஒலித்தல் வேண்டும். பாபு என்று எழுதினால் paabu என்றுதான் ஒலித்தல் வேண்டும். இது தமிழ் முறை. வேற்று மொழிச்சொற்களால், முறை பிறழ்ந்து ஒலிப்பதால், அடிவேரான தமிழ் ஒலிப்பு மிகவும் கெடுகின்றது. இதனைத் தடுக்கவே எளிய ஒரு முறையை பரிந்துரைத்தேன், ஆனால் இங்கு ஏற்கப்படவில்லை. Babu என்று எழுதவேண்டும் என்றால் தமிழில் 'பாபு என்றோ ˚பாபு என்றோ எழுதலாம். உலகில் எத்தனையோ மொழிகள் இப்படி ஒலித்திரிபுக் குறிகளை இட்டு எழுதுகின்றன. பிரெஞ்ச்சு (பிரான்சியம்), 'டாய்ட்சு, எசுப்பானிய மொழி, செக் மொழி என்று நூற்றுக்கணக்கான மொழிகள் பயன்படுத்துகின்றன. எனவே 'டவுன் டவுன் என்று எழுதிக்காட்டலாம். அல்லது ˚டவுன் டவுன் என்று எழுதிக்காட்டலாம். இது ஒரு பெரிய மாற்றம் இல்லை. இம்முறையையும், சிறுபான்மை இடங்களிலேயே பயன்படுத்துதல் நல்லது. மற்ற இடங்களில் நம் மொழிக்கு ஏற்றவாறு திரித்து எழுதுதலே சிறந்தது.--செல்வா 13:32, 7 ஆகஸ்ட் 2008 (UTC)