பேச்சு:நாட்டார் பாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png நாட்டார் பாடல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

தலைப்பை நாட்டார் பாடல் என மாற்றலாமா? --கோபி 15:39, 30 ஆகஸ்ட் 2006 (UTC)

பாராட்டுக்கள்[தொகு]

நல்ல கட்டுரை. நான் சொல் தேர்வுப் பரிந்துரைகளுக்கேற்ப சில மாற்றங்களைச் செய்துள்ளேன். "ஸ்தாயி", "சந்தம்" போன்றவற்றிற்குத் தனித்தமிழில் இணைச்சொற்களிருந்தால் எவரேனும் சேர்க்கவும். என்னிடம் "தமிழர் நாட்டுப் பாடல்" என்ற தலைப்பில் ஒரு பழைய நூல் உள்ளது. விரைவில் அதிலிருந்து பல தகவல்களை மேற்கோள்களுடன் சேர்க்கிறேன். இது போன்ற தேடல்களிலும் ஏதாவது மேற்கோள்கள் கிடைக்கலாம். -- Sundar \பேச்சு 12:31, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழர் நாட்டுப் பண் என்றொரு கட்டுரை அமைத்து விரிவாக்கத் திட்டம் உள்ளது. எவராவது வயல்வெளிகளில் நடுகையிலிருப்பவர் பாடும் பாடல்களை ஒலிப்பதிவு செய்து பதிவேற்ற முடியுமா? இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இதுபோன்று பாடுவார்கள் தானே? இல்லையெனில் விஜயலட்சுமி-நவநீதகிருஷ்ணன் குழுவினரின் ஒலி நாடா அனுமதியுடன் கிடைக்குமா? -- Sundar \பேச்சு 13:27, 2 செப்டெம்பர் 2006 (UTC)


சுந்தர், அடுத்த ஊருக்கு வரும்பொழுது (இன்னும் ஒரு வருஷம் ;(?!) வேண்டுமானால், கிராம வழக்கங்கள், பாடல்கள் குறித்து விரிவான ஊடகப் பதிவுகளை என்னால் செய்ய இயலும். விஜயலட்சுமியின் ஆக்கங்கள் கூட commercialised என்று தான் தோன்றுகிறது. இருந்தாலும், அனுமதி கிடைத்தால் தற்போதைக்கு போட்டு வைக்கலாம். தமிழ்நாட்டுத் தாலாட்டுக்கள், ஒப்பாரிப் பாடல்கள், நலுங்குப் பாடல்கள், வயல்வேலைப் பாடல்கள் என்று ஆவணப்படுத்தப்பட வேண்டியன நிறைய உள்ளன. இவற்றின் நடமாடும் கலைக்களஞ்சியங்களான கிராமத்து முதியோர் அருகிக் கொண்டே வருவது கவலைக்குரிய விஷயம். 1950க்குப் பின்னர் பிறந்த தலைமுறையினருக்கு கூட இவற்றில் பரிச்சயம் குறைவு தான். --ரவி 13:38, 2 செப்டெம்பர் 2006 (UTC)

கட்டுரை நன்றாக உள்ளது. மேலும் விரிவாக்கக்கூடிய கட்டுரை. சுந்தர், நாட்டார் வழக்கியல் பற்றிய சில புத்தகங்கள் என்னிடமும் உள்ளன. நீங்கள் உங்கள் கட்டுரையைத் தொடங்குங்கள். மேலதிக தகவல்கள் தேவைப்படின் நானும் உதவுகிறேன். Mayooranathan 16:27, 2 செப்டெம்பர் 2006 (UTC)

ரவி, மயூரநாதன் நன்றி. சிந்து, கோபி, மற்றும் கனகு ஆகியோர் தொகுத்திருந்த கட்டுரையுடன் நான் சில கூடுதல் தகவல்களும் மேற்கோள்களும் மட்டுமே இணைத்தேன். விரைவில் துணைக் கட்டுரைகளைத் துவங்குகிறேன், உங்கள் உதவிகளை எதிர்நோக்கி. -- Sundar \பேச்சு 07:09, 4 செப்டெம்பர் 2006 (UTC)

மிக நல்ல கட்டுரை. பாராட்டுகள்! பல்லாண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில், கருப்பாயி (?) என்னும் ஒரு பெண்மணி அருமையாக நிறைய நாட்டுப்புறப் பாடல்கள் பாடி ஒரு கலக்கு கலக்கினார். அது அரசு நிறுவனத்தில் பதிவானதால், ஒரு சிறு பகுதியையாவது இங்கே பதிவு செய்ய உரிமை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். ஒலி, ஒளிப் பதிவுகள் நாம் சேர்ப்பதிலும் கருத்து செலுத்தலாம். கட்டற்ற த.வி, ஒப்பற்ற த.வி ஆக வேண்டும்.--C.R.Selvakumar 20:34, 26 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா

--- யப்பானிய நாட்டர் பாடல்கள்

யப்பானிய நாட்டர் பாடல்களில் குனியோ யங்கிதா (யூலை 31, 1875 - ஆகஸ்ட் 8, 1962), சினோபு ஒரிகுச்சி (பிப்ரவரி 11, 1887 - செப்டெம்பர் 3, 1953) என்பவர்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள். இவர்கள் மெய்ஜி காலப்பகுதியில் (23 ஒக்டோபர் 1868- 30 யூலை 1912) ஏற்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நாட்டார் கலைகளை ஆராய்ந்து அவற்றை சீர்படுத்தினார்கள். யப்பானின் மியசக்கி மாகாணத்தின் விவசாய திணைக்களத்தில் யங்கிதா அவர்கள் பணியாற்றும் போது தமது பணி நிமித்தமாக சிபா என்ற விவசாய கிராமத்த்துக்கு அடிக்கடி செல்லவேண்டியிருந்த்து. அங்கு பணியாற்றிய காலப்பகுதியில் கிராமத்தில் மக்கள் வேட்டைக்கு செல்லும் போது ஏற்பட்ட அனுபவங்களின் வாயிலாக புணையப்பட்ட நாட்டார் கதைகளையும் பாடல்களையும் அவர் தொகுத்து வெளியிட்டார். இதுவே நாட்டார் பாடல்கள் தொடர்பாபன முதலாவது வெளியீடாகும். மெய்ஜி காலப்பகுதியில் நாட்டார்ப் பாடல் பற்றிய கல்வி முக்கியமற்ற ஒன்றாக அக்ருதப்பட்டது. அதனை கற்போரின் எண்ணிக்கையும் மிகக்குறைவாகவே காணப்பட்டது. அக்காலத்தில் சினோபு ஒரிகுச்சி நாட்டார் பாடல்களில் மூக்கிய பங்கு செலுத்தினார். முக்க்கிய யப்பானின் இடோ காலப்பகுதியை பற்றிய ஆய்வுகளைல் ஈடுபட்டார்.

--- இதுவே யப்பானிய விக்கியில் காணப்படும் யப்பானிய நாட்டா பாடல் பகுதியின் மொழிமாற்றமாகும். இதில் வசன மாற்றங்களை செய்து பொருத்தமாயின் கட்டுரையில் சேர்க்கவும்

--டெரன்ஸ் \பேச்சு 04:54, 12 அக்டோபர் 2006 (UTC)[பதில் அளி]

குறிப்புகள்[தொகு]