பேச்சு:நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொன்ம வழியாக இலங்கையில் விசயன் வரமுதல் இயகர் நாகர் என்ற இரு மக்கள் குழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நாகர்கள் தமிழர்கள் என்று பொது வழக்கில் குறிப்பிடப்படுவதில்லை, அதற்கான தக்க சான்றுகளும் இல்லை. விசயன் என்பதே ஒரு தொன்மக் கதைத்தான். எனவே தொன்மங்களையும் இலக்கியங்களையும் literal/அப்படியே வாசித்து வரலாறுக் கட்டுரைகள் போன்று எழுதுவது தவறு. பல்வேறு மூலங்கள் முறையியல்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். வேடர்கள் என்ற இலங்கைப் பழங்குடிகள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கான மொழி, பண்பாடு, நம்பிக்கைகள் உண்டு. தமிழர் செறிந்த பகுதிகளில் வசித்தவர்கள், அல்லது தமிழர்களோடு கலப்பு மணம் செய்தவர்கள் தமிழ் பேசக் கூடும். அதற்காக வேடர்கள் அனைவரையும் தமிழர் என்று வரையறை செய்ய முடியாது. --Natkeeran (பேச்சு) 17:11, 28 ஏப்ரல் 2012 (UTC)

இருக்கலாம். ஆனால் இதைக் கூறியது இலக்கியங்களிலிருது அல்ல. சில ஆராய்ச்சியாளர்கள் கூறியதைக் கொண்டே. மேலும் கட்டுரைத் தலைப்பில் தமிழென்று அடைப்புக்குறிக்குள் போட்டது நாகலாந்து நாகர்களையும் இவர்களையும் பிரித்துக்காடுவதற்காக. இவை இலக்கியச் செய்திகள் மட்டும் அல்ல. அதற்கான மேற்கோள்களும் கட்டுரையில் கொடுக்கப்பட்டுளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:25, 28 ஏப்ரல் 2012 (UTC)
உங்கள் விளக்கத்துக்கு நன்றி. ஆனால் ஆதாரங்கள் வலுவாக இல்லை என்றே கருதுகிறேன். --Natkeeran (பேச்சு) 03:17, 29 ஏப்ரல் 2012 (UTC)