பேச்சு:நல்லங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தலைப்பு[தொகு]

தமிழில் இவ்விலங்குக்கு வழக்குச்சொல் இல்லையென்று நினைத்திருந்தேன். (அழுங்கு என்ற பொதுப்பெயரைத் தகவலுழவன் சேர்த்திருந்தார்.) ஆனால் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலியில் குறிப்பாக இந்த விலங்குக்கே நல்லங்கு எனப் பெயர் தந்துள்ளார்கள். பார்க்க: சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். பக். 2170. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.7:1:1927.tamillex.  தலைப்பை மாற்றிவிடலாமா? -- சுந்தர் \பேச்சு 11:49, 22 பெப்ரவரி 2012 (UTC)

ஆம், தாங்கள் கூறுவது சரியானதே. கட்டுரையானது நல்லங்கு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. --மதனாஹரன் (பேச்சு) 04:31, 10 மார்ச் 2012 (UTC)
நன்று :) --செல்வா (பேச்சு) 13:40, 10 மார்ச் 2012 (UTC)
நன்றி. -- சுந்தர் \பேச்சு 13:48, 10 மார்ச் 2012 (UTC)
அழுங்கு என்ற சொல்லே வழக்குச் சொல்லாகத் தெரிகிறது. மழைக்காலமும் குயிலோசையும் என்ற நூலிலும், http://www.germantamilology.com/docs/DigitalArchives.pdf தொகுப்புக்கமையவும். --Natkeeran (பேச்சு) 19:35, 27 மே 2012 (UTC)[பதிலளி]

அழுங்கு என்பது பொதுப் பெயர் என்று சுந்தர் விளக்கம் தந்துள்ளார். --மதனாகரன் (பேச்சு) 08:21, 30 மே 2012 (UTC)[பதிலளி]

அழுங்கு கவச உடலிகளுக்கான பொதுப்பெயராகத் தெரிந்ததால் அதற்கேற்றாற்போல் மாற்றியிருந்தேன், நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 11:09, 30 மே 2012 (UTC)[பதிலளி]

இது குறித்தவைகள்[தொகு]

இது குறித்த உரையாடல், ஆலமரத்தடி#முதற்பக்கம்-உங்களுக்குத் தெரியுமா? என்ற தலைப்பிலும் உள்ளது.-- உழவன் +உரை.. 06:57, 26 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஆர்மடில்லோ அல்லது சிற்றழுங்கு[தொகு]

நல்லங்கு என்பதற்கான சான்று பழுதடைந்து விட்டது போல் தெரிகிறது. மேலும் அது ஒரு தமிழ்ச்சொல் என்பதற்கான நம்பத்தகுந்த சான்று எதுவும் கிடைக்கவில்லை. தவிர கீழ்க்கண்ட மூன்றும் அழுங்கு வகைகள் (கவச உடல் கொண்டவை) ஆகும்.

  • Armadillo= ஆர்மடில்லோ
  • Pangolin= அழுங்கு
  • Anteater= எறும்புண்ணி [1]

ஒரு உயிரினத்திற்கான தமிழ்ப்பெயர் இல்லாதவிடத்தில் பிறமொழிப் பெயர்களை அப்படியே பயன்படுத்துவதில் தவறில்லை. (எ-டு சாலமாண்டர்). எனவே ஆர்மடில்லோ என்ற தலைப்பே சரியாக இருக்கும்.[2] அல்லது ஆர்மடில்லோ என்ற எசுப்பானிய சொல்லின் பொருளான சிற்றழுங்கு (little armoured one) என்ற பெயரும் பொருத்தமாக இருக்கும். Varunkumar19 (பேச்சு) 06:22, 6 மார்ச் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நல்லங்கு&oldid=2676615" இலிருந்து மீள்விக்கப்பட்டது