பேச்சு:நரிமூக்குப் பழவௌவால்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நரிமூக்குப் பழவௌவால் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெரிய குறு ஆகிய இரண்டு முன்னொட்டுகள் வருவதால், சிறு குழப்பம் வரக்கூடும். மாறாக இதன் "அறிவியல்" பெயராகிய Cynopterus என்பதை ஒட்டி நாய்மூக்கு பழவௌவால் என்றோ, நரிமூக்கு பழவௌவால் என்றோ கூறலாம். பழவௌவால் என்பதே ஆங்கிலத்தில் megabat எனப்படும் வகைக்கு ஈடாகக் கூறலாம். ஆங்கிலத்திலும் இவற்றை (megabats) fruit bats என்று அழைக்கின்றனர். பறக்கும் நரி (flying foxes) என்றும் அழைக்கின்றனர். இந்த நாய், நரி என்பதற்கான காரணம் அறிவியல் பெயரில் உள்ள Cynopterus என்னும் சொல்லில் உள்ள cyno (< கிரேக்கம் κυνο) என்பதன் பொருள் நாய் என்பதால் ஆகும். இதன் மூக்கு நாய்முகம் போன்றோ, நரிமுகம் போன்றோ இருப்பதாகக் கருதப்படுவதால் அப்படிப் பெயர் ஏற்பட்டது. pterus என்னும் பின்னொட்டு πτερόν என்பதில் இருந்து வந்தது. இதன் பொருள் இறக்கை. பறக்கும் உயிரினங்கள் பலவற்றுக்கும் இது பின்னொட்டாக வரும். sphinx என்னும் சொல் ""monster" என்னும் பொருளில் வந்திருக்கலாம். கிரேக்க தொன்மக்கதைகளில் பெண்ணின் முகத்துடன், இறக்கைகள் பொருந்திய அரிமா (சிங்க) உடல் கொண்ட ஒரு கற்பனை உயிரினம் பற்றிப் பேசுவார்கள். அப்படிப்பட்ட திரிமாறியான அச்சூட்டும் விலங்கு என்னும் பொருள் கொண்டதாக இருக்கலாம். Cynopterus sphinx என்னும் அறிவியற் பெயரை கினோப்டெரசு இசுபிங்க்ஃசு என அழைக்கலாம். sphinx என்பதை எசுப்பானியத்திலும் போர்த்துகீசியத்திலும் esfinge என்று முன்னே e இட்டு வழங்குகின்றனர். எனவே இவ்விலங்கின் பெயரை நாய்மூக்குப் பழவௌவால் என்றோ நரிமூக்குப் பழவௌவால் என்றோ வழங்கலாம் என்று கருதுகின்றேன். (ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலியைப் பின்பற்றி கிரேக்கச்சொற்கள் பற்றிய சில கருத்துகளை இங்கு இட்டிருக்கின்றேன்). இசுபிங்க்ஃசு என்பதைக் காட்ட (பலர் அறிந்திருந்தாலும்) ஒரு படத்தை இணைக்கின்றேன்.

இசுபிங்க்ஃசு

--செல்வா (பேச்சு) 19:51, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]

நன்றி. நாய்மூக்குப் பழவௌவால் அல்லது நரிமூக்குப் பழவௌவால் என்பதில் மிகப் பொருத்தமானதற்கு பெயரை மாற்றிவிடலாம்.--Anton (பேச்சு) 01:41, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]

நரியும் நாய்ப்பேரினத்தைச் சேர்ந்தது என்பதால், நரிமூக்குப் பழவௌவால் என மாற்றியுள்ளேன். --செல்வா (பேச்சு) 02:13, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]