பேச்சு:தொ. மு. இராமராய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Pls provide a credible source of reference for the info given in the article and pls try to rewrite the article following wiki standards and using minimal use of non tamil words.Thanks--ரவி (பேச்சு) 11:37, 28 ஜூன் 2005 (UTC))

இந்தக் கட்டுரை நீக்கப்பட வேண்டும் அல்லது மேம்படுத்தப்பட வேண்டும் .இந்திய விக்கிபீடியர்கள் கவனிக்க.கட்டுரையில் குறிப்பிடுபவர் பற்றி தெரிந்தவர்கள் மேம்படுத்தவும். அல்லது நீக்கிவிடவும்.--டெரன்ஸ் \பேச்சு 03:59, 15 ஏப்ரல் 2007 (UTC)

வாழ்நாள் சாதனைகள்[தொகு]

  • சௌராட்டிர மொழிக்கு எழுத்துக்கள் இல்லை என்ற தவறான கருத்தை துடைத்து, திருந்திய வடிவம் பெற்ற லிபியில் தனது சொந்த உழைப்பில் சௌராட்டிர மொழியில் பல நூல்கள் அச்சிட்டு சௌராட்டிர மொழியை பிரபலப்படுத்தியவர்.
  • இவர் தமது வடமொழி ஆசிரியரான சதுர்வேதி இலக்குமணாச்சாரியாரைக் கொண்டு சௌராட்டிரப் பள்ளிப்பாட நூல்களை எழுதச் செய்தார்.
  • இலக்கியங்களை உருவாக்க துணைபுரியும் இலக்கணத்தின் அருமையினை உணர்ந்து இராமாராய் ‘ சௌராட்டிர வியாக்கரணம் ’ என்ற இலக்கண நூலை இயற்றினார்.
  • சௌராட்டிர மொழியினை இளஞ்சிறார்கள் கற்றுத் தேர்வதற்கென்றே ’சௌராட்டிர போதனா’ மற்றும் ’சௌராட்டிர பிரைமர்’ போன்ற பள்ளிப் பாட நூல்களை வெளியிட்டார்.
  • சௌராட்டிர மொழியின் சிறப்பினை பிற மொழியினரும் உணரும் வகையில் “சதுர் பாஷா வல்லரி” என்ற நூலை இயற்றினார். இந்நூல், சௌராட்டிர மொழிச் சொற்களை வடமொழி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் மொழிச் சொற்களுடன் ஒப்பு நோக்கி ஆராயப் பெரிதும் உதவுகிறது.
  • தமது மக்களின் ஆசார அனுஷ்டானாங்களை வளர்ப்பதற்கென்றே “சதுர்வேதசார சந்தியா வந்தனம்” போன்ற சிறு நூல்களை ஆக்கித் தந்தார்.
  • இவர் இயற்றிய தமது 25 நூல்கள் அனைத்தையும் ‘ சௌராட்டிர லிபி ’ யில் தான் வெளியிட்டார்.
  • இவரது ‘ சௌராட்டிர நந்தி நிகண்டு ’ சௌராட்டிரமொழியில் அகராதி இல்லாத குறையை நீக்கியுள்ளது.
  • இவர் இயற்றிய ’சௌராட்டிர நீதி சம்பு’ நல்லதொரு நீதி நூலாக விளங்குகிறது. இந்நூலை கற்று பாராட்டிய ஆங்கிலேயர் டாக்டர் இராண்டேல், இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். சௌராட்டிரர்களின் பண்பாட்டை எடுத்துக்கூறும் இந்நீதி நூல் மகாத்மா காந்தியடிகளால் மிகவும் பாராட்டப்பட்டது. சத்தியத்தின் பெருமையினைக் கூறும் சுலோகத்தைக் காந்தியடிகள் இரசித்துப் போற்றினார். சௌராட்டிர மக்கள், திருக்குறளுக்கு ஈடாக இந்த நீதி சம்பு நூலை போற்றுகின்றனர்.
  • இராமாராய் மொத்தம் 25 நூல்கள் இயற்றியுள்ளார். இவர் தமது நூல்களில் பெரும்பாலும் முடிந்த வரைக்கும் பிற மொழிக் கலப்பில்லாத தூய சௌராஷ்டிரமொழியையே பயன்படுத்தியுள்ளார். ஒரு மொழிக்கு இருக்க வேண்டிய சிறப்புகளான எழுத்து, இலக்கணம், அகராதி, நீதி நூல் மற்றும் உரைநடை ஆகியவைகளை உள்ளடக்கி சௌராட்டிர மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொ._மு._இராமராய்&oldid=2922567" இலிருந்து மீள்விக்கப்பட்டது