பேச்சு:தொழுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித் திட்டம் இசுலாம் (Rated ஆரம்ப-class, தெரியாத-importance)
WikiProject iconஇந்த கட்டுரை விக்கித் திட்டம் இசுலாம்-ன் வாய்ப்பளவில் உள்ளது. விக்கிப்பீடியாவில் இருக்கும் இசுலாம்-தொடர்பான கட்டுரைகள்விரிவாக்க இது ஒரு கூட்டு முயற்சி ஆகும். இந்த திட்டத்தில் பங்கேற்க அதன் பக்கத்திற்கு செல்லவும். அங்கே நீங்கள் விவாதிக்கலாம் மற்றும் செய்யவேண்டியவைகளை பார்க்கலாம்
ஆரம்ப நிலை பிரிவில் வரும் கட்டுரை ஆரம்ப  இந்த கட்டுரை ஆரம்ப பிரிவாக தர நிர்ணயிக்கப்பட்டுள்ளது விக்கித்திட்டத்தின் தர நிர்ணைய அளவுகோலில்.
 தெரியாத  இந்த கட்டுரை இன்னும் தர மதிப்பீடு செய்யப்படவில்லை , விக்கித்திட்டத்தின் importance அளவுகோலில்.
 

இந்தக் கட்டுரையில் தேவையான தகவல்கள் உள்ளன. எனவே இதனை நீக்கத் தேவையில்லை. இஸ்லாம் மதக் கட்டுரைகள் விக்கிபீடியாவில் மிகக் குறைவு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான ஒருவரிக் கட்டுரைகள் (தமிழ்த் திரைப்படங்கள் சில உட்பட) உள்ளன. அவற்றைத் தேடிப்பிடித்து அழிக்கப்பாருங்கள்.--Kanags 13:16, 11 செப்டெம்பர் 2007 (UTC)

அவற்றைத் தேடிப்பிடித்து அழிக்கப்பாருங்கள். இதனை எரிச்சலுணர்வுடன் கூறுகிறீர்களோ தெரியவில்லை. ஆனால் //எந்த எந்தத் தொழுகையை எந்த எந்த நபி முதலில் தொழுதார்கள்:// என்ற ஒரு தகவ்ற் பட்டியல் எதனையும் விளக்குவதாக இல்லை. ஒரு சில வரியாயினும் தன்னளவில் கருத்து விளக்குவதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.
அண்மைக்காலங்களில் தமிழில் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விக்கிப்பீடியாக் கட்டுரை இருந்தால் அதுவே முதலாவதாக வருகிறது. எந்தக் கட்டுரை நீக்கத்திலும் எனக்கு எந்த தனிப்பட்ட பயனும் இல்லை. த.வி.யின் தரம், நம்பகத்தன்மையை மட்டுமே கருத்தில் கொள்கிறேன்.
ஒருவரிக் கட்டுரைகள் நூற்றுக் கணக்கில் இருந்தன. அவற்றில் பலவற்றை நீக்கியும் சிலவற்றை விரிவாக்கியும் என்னால் இயன்றளவு பங்களித்துள்ளேன். ஓராண்டின் முன்னர் உள்ளடக்கமேயில்லாமல்கூட கட்டுரைகள் இருந்தன. இப்பொழுது 512 பைட் அளவை விடச் சிறிய கட்டுரைகள் மிகச் சொற்பமாகியுள்ளன. முதல் 1000 குறுங்கட்டுரைகளில் பல விரிவாக்கப்படக் கூடியவையே. குறுங்கட்டுரைகள் பக்கத்தைப் பல பயனர்கள் கவனித்து விரிவாக்கினால் மிகப் பயனுள்ளதாகவே இருக்கும். கோபி 13:30, 11 செப்டெம்பர் 2007 (UTC)

இந்தக் கட்டுரையில் மேற்கோள்களைச் சேர்க்கலாம். அறிவிப்பாளர் ... என்று பல இடங்களில் உள்ளது. அது தேவையில்லை. மேற்கோளாக வேண்டுமானால் சேர்க்கலாம். நிறைய ஹதீதுகள் இணையத்தில் உள்ளது. ஹதீதில் இருந்து சொன்னால் அந்த ஹதீது இணையத்தில் இருந்தால் இணையத்தில் இருந்து மேற்கோள் தரலாம், உறுதியாக நூலில் இருக்கும். குரானும் தமிழில் (இணையத்திலும்) உள்ளது அதையும் மேற்கோளில் தரலாம். இது செப்பனிடப்படவேண்டிய கட்டுரை. இசுலாம் பற்றி அறிந்தவர்கள் செய்தால் தவறுகளை குறைக்கலாம்--74.116.63.13 15:15, 8 மார்ச் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொழுகை&oldid=1688734" இருந்து மீள்விக்கப்பட்டது