பேச்சு:தொழில் முனைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முயற்சியாண்மை என்பது Entrepreneurship ஆ? --கோபி 16:00, 7 செப்டெம்பர் 2006 (UTC)

ஆம் அதுவேதான் பொருளியலில் உற்பத்திக்காரணிகளில் ஒன்றாக கருதப்படுகின்றத்து. --கலாநிதி 16:41, 7 செப்டெம்பர் 2006 (UTC) kalanithe

முயற்சி என்பதற்கு மாறாக முயற்று ( = முயற்சி) என்னும் பெயர்ச்சொல் வடிம் கொண்டால். முயற்றாண்மை என்று வரும். இது இன்னும் வலுவூட்டும் சொல்லாக உணர்கிறேன். Entrepreneur என்பதை முயற்றுநர் என்றும் கூறலாம். ஆண்மை என்பது ஆள் (வினை), ஆள்திரம் (திரம் = உரம், உறுதி) என்பதை குறிக்கும் பண்புப்பெயர்.
திருக்குறளில் பரவலாக அறியப்பட்ட ஒன்று

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

அங்கே முயற்றின்மை என்பதை ஆங்கிலத்தில், lack of enterprise, lack of resourcefulness என்பது போல மொழி பெயர்க்க வேண்டும். முயிறு என்றால் எறும்பு (சுறுசுறுப்புக்குப் பெயர் போன உயிரினம் :) ஆனால் முயிறு என்பது எறும்புக்கு வேறு பொருளிலும் வந்திருக்கலாம். எ.கா: சட்டென்று கோபம் வந்து தாக்கவல்லது (முசிறு என்பதும் எறும்பை, செவ்வெறும்பைக் குறிக்கும். ஆனால் முசிறு என்பது கடுகடுப்பாக உள்ளவனையும் குறிக்கும். முசுடு என்றும் சொல்வார்கள் :) ) வேறு வழிகளிலும் வினையாண்மையுடன் தொழில் அல்லது ஓர் இயக்கத்தைத் துவக்கும் திறமையைக் குறிக்கலாம். தொழிலில் நடத்துவதில் வல்லமை உடைமையை தொழிலாண்மை என்று கூறலாம். --செல்வா 15:26, 24 மார்ச் 2008 (UTC)

தொழில் முனைவோர் என்ற சொல் enterpreneurஐக் குறிக்கும் வண்ணம் புழக்கத்தில் இருக்கிறது. தொழில் அதிபர் என்பதற்கு தமிழ்ச் சொல் என்ன?--ரவி 15:58, 24 மார்ச் 2008 (UTC)

தொழிலாளி முதலாளி என்னும் வழக்கு பற்றி முதலாளி எனலாம். தொழில்முதலாளி எனலாம். தொழில்முதல்வர், தொழில் உடையார் (உடையார் = உடையவர், உடமையாளர்). தொழிலாண்டவர், தொழிற்பண்ணையார் இப்படி ஏதாவதொன்று. ஓக்குதல் என்றால் உயர்த்துதல், அறுதியிட்டு வைத்தல், ஆக்குதல், எழும்பச்செய்தல் என்று பொருள். ஆகவே தொழிலோக்கர் எனலாம். தொழிலோச்சன்(/ர்) என்றும் சொல்லலாம். ஒச்சுதல் என்றாலும் உயர்த்துதல், ஓட்டுதல் (சிறப்பாக முன்னெடுத்து நடத்துதல்) என்று பொருள். --செல்வா 16:23, 24 மார்ச் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொழில்_முனைவு&oldid=514331" இருந்து மீள்விக்கப்பட்டது