பேச்சு:தொழிற்பயிற்சி நிலையங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள விக்கிபீடியா ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் , என் பெயர் ஜே .இளங்கோவன். திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலே 1983 -1985 பொருத்துநர் பிரிவில் படித்தேன். தற்சமயம் நான் படித்த திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலேயே பொருத்துநர் ஆசிரியராக பணிபுரிகிறேன்.உங்களது விக்கிபீடியாவின் உதவி கேட்டதும் கொடுக்கும் கடவுள் போல தகவல்களை உடனே கொடுக்கிறது.உங்கள் பணி இன்னும் பல்லாண்டுகள் தொடரவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.எனக்கு இதுவரை தேவையான தகல்கள் அனைத்தையும் விக்கிபீடியாவின் உதவியால்தான் பெற்றேன் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்ளுகிறேன்.மேலும் மேலும் இதற்கு என்னால் முடிந்த தகவல்களை என்னுடைய கருத்துகளை அளிக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துகோள்ளுகிறேன். நன்றி.

ஜே .இளங்கோவன் www.ititrichy.blogspot.com

நீக்கப் பரிந்துரை[தொகு]

இக்கட்டுரையை விட முழுமையான தகவல்களுடன் ஏற்கனவே அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கட்டுரை உள்ளது. எனவே இக்கட்டுரையை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:27, 17 மார்ச் 2012 (UTC)

இரண்டும் ஒன்று மாதிரித் தெரியவில்லையே. ஒன்று இந்திய அரசால் நடத்தப்படுகிறது. மற்றையது தமிழக அரசால் நடத்தப்படுகிறது. அப்படித்தான் இரண்டு கட்டுரைகளிலும் தரப்பட்டிருக்கிறது.--Kanags \உரையாடுக 09:17, 17 மார்ச் 2012 (UTC)
இந்தியாவிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்தும் இந்தியாவிலுள்ள மாநில அரசுகளாலும், ஒன்றியப் பகுதி ஆட்சி அமைப்புகளாலும்தான் நடத்தப்படுகின்றன. இந்தத் தொழிற்பயிற்சிக்கான பாடத்திட்டங்கள், கேள்வித்தாள் உருவாக்கம், தேர்வுமுறைகள் போன்றவை மட்டும் இந்தியா முழுமைக்குமாக இந்திய அரசால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்திய அரசு எந்தத் தொழிற்பயிற்சி நிலையத்தையும் நடத்தவில்லை. தற்போதுள்ள “தொழிற்பயிற்சி நிலையங்கள்” கட்டுரையிலுள்ள தகவல்கள் தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒன்றான திருச்சிராப்பள்ளி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை மட்டும் குறிப்பதாக உள்ளது. இதில் கூடுதலாக சுயநிதி தொழிற்பயிற்சி நிலையம் குறித்த தகவல் ஓரிரு வரிகளில் உள்ளது. ”சுயநிதி தொழிற்பயிற்சி நிலையம்” எனும் தலைப்பில் வேண்டுமானால் தனிக் கட்டுரை ஒன்று உருவாக்கலாம்.