பேச்சு:தொழினுட்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொழினுட்பம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தொழில்நுட்பம் என்பதில் என்ன பிழை? அவ்வாறேயாயினும் தொழிற்நுட்பம் என்றல்லவா இருக்க வேண்டும் தொழினுட்பம் என்பது தவறான வழிமாற்று.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:13, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

இது தவறான வழிமாற்றுப் பக்கம். இதனை மீளமையுங்கள். --இராஜ்குமார் (பேச்சு) 05:21, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

பார்வதிஸ்ரீ, தொழிற்நுட்பம் என்பதற்குரிய இலக்கண விதி என்ன? ல் + ந = ன என்று தமிழ் இணையக் கல்விக்கழகம் (முன்னைய தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) கூறுகிறதே. நீங்கள் எப்படி அதனைப் பிழை என்கிறீர்கள்?--பாஹிம் (பேச்சு) 05:45, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

பாஹிம். நீங்கள் சொல்வது சரி தான். வருமொழி முதலில் மெல்லினம் தான் வந்துள்ளது. வல்லினம் என்றால் தான் 'ற்' வரும். தொழினுட்பம் என்பது சரி தான்.--இராஜ்குமார் (பேச்சு) 06:19, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

  • பாகிம் தாங்கள் சொல்வது சரி.

தெளிந்தேன். மிக்க நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:49, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

அப்படியானாற் தொழினுட்பம் என்றுதானே இருக்க வேண்டும்? இலங்கையிற் கூடத் தொழினுட்பம் என்று பயன்படுத்தும் வழக்கமே உள்ளது. விளக்கத்துக்கு நன்றி, பார்வதிஸ்ரீ மற்றும் இராஜ்குமார்.--பாஹிம் (பேச்சு) 08:29, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

தொழினுட்பம் சரி. ஆனால் தலைப்பில் உள்ள தொழிநுட்பம் என்பது தவறு.--கி.மூர்த்தி (பேச்சு) 14:17, 23 ஏப்ரல் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொழினுட்பம்&oldid=2914658" இலிருந்து மீள்விக்கப்பட்டது