பேச்சு:தொல்லுயிர் எச்சம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொல்லுயிர் எச்சம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நல்ல பதிவு--C.R.Selvakumar 21:08, 22 ஜூன் 2006 (UTC)செல்வா

நன்றி. -- Sundar \பேச்சு 06:30, 23 ஜூன் 2006 (UTC)

பரிணாம உயிரியல் பகுப்பு[தொகு]

இக்கட்டுரைக்கு மூலக்கூறு உயிரியல் பகுப்பை விட பரிணாம உயிரியல் பகுப்பு இன்னும் பொருத்தமாக இருக்கும்--ரவி 14:50, 4 ஜூலை 2006 (UTC)

Fossil[தொகு]

Fossil என்பதற்கு ஊடகங்கள் புதைபடிவம் என்ற சொல்லை பயனப்டுத்துகின்றன என நினைக்கிறேன். எனவே தலைப்பை புதைவடிவம் என மாற்றலாமா ? βινόδ  வினோத் 15:13, 1 பெப்ரவரி 2008 (UTC)

"any remains, impression, or trace of a living thing of a former geologic age, as a skeleton, footprint, etc." என்று dictionary.com விளக்கம் தருகிறது. எனவே ஒரு உயிரியின் படிவம் என்பதை வலியுறுத்த வேண்டும். 'புதையுயிர் படிவம்' என்ற சொல் பொருந்தும் என நினைக்கிறேன்.--சிவகுமார் \பேச்சு 15:24, 1 பெப்ரவரி 2008 (UTC)

புதைபடிவம் என சுருக்கி அழைத்தாலும் என்ற தவறும் இல்லை. ஆங்கிலத்தில் எவ்வளவோ சுருக்கங்கள் இவ்வாறு புழக்கத்தில் உள்ளன. மற்றும் புதைபடிவம் நல்ல தனித்தமிழ்ச்சொல்(!?!) என்ற நிலையில் அதை முன்னிலைப்படுத்துவதில் தவறில்லை என நினைக்கிறேன் βινόδ  வினோத் 15:29, 1 பெப்ரவரி 2008 (UTC)

மற்ற பயனர்களின் கருத்துக்களையும் அறிந்து மறுப்பேதும் இல்லையெனில் மாற்றி விடலாம்.--சிவகுமார் \பேச்சு 15:35, 1 பெப்ரவரி 2008 (UTC)

வினோத், தனித்தமிழ்ச் சொல் என்பதாலேயே முதன்மைப்படுத்தலாம் என்றில்லை ;) எந்தெந்த ஊடகங்களில், ஒரு எடுத்துக்காட்டுக்கு, புதைபடிவம் என்ற சொல்லைக் கண்டீர்கள் என்று சொன்னால் உதவும். தமிழ்நாட்டுக்கு வெளியில் இருப்பதால் அங்கு நடப்பில் உள்ளவற்றை அறிய முடியவில்லை :( புதைபடிவம், தொல்லுயிர் எச்சம் - இரு சொற்களுமே அகரமுதலியில் இருக்கின்றன. பொது வழக்கில் இருப்பதைத் தாராளமாக முதன்மைப்படுத்தலாம் . பார்க்க - http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=fossil&OptSearch=&id=All&text2=&text1=&link=null&cat=null&book=null - --ரவி 16:12, 1 பெப்ரவரி 2008 (UTC)

தொலைகாட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் எங்கோ கேள்விப்பட்ட பார்த்த ஞாபகம். சரியாக தெரியவில்லை. எனினும் தொல்லுயிர் எச்சத்தை எங்கும் கேள்விப்பட்டதாக தெரியவில்லை βινόδ  வினோத் 16:52, 1 பெப்ரவரி 2008 (UTC)

தொல்லுயிர் எச்சம் என்னும் சொல்லாட்சி அருமையான ஒன்று, அதனை ஏன் மாற வேண்டும்? பிற பொருத்தமான சொற்கள் இருப்பின், கட்டுரையில் குறிபிடலாம், ஆனால் தலைப்பை மாற்ற வேண்டாம் என்பது என் கருத்து. --செல்வா 03:56, 2 பெப்ரவரி 2008 (UTC)

வழக்கத்தில் உள்ள எண்ணற்ற சொல்லாட்சிகளுக்கு மாற்று சொல்லாட்சிகள் தரலாம், அருமையான சொல்லாட்சி என அனைத்தையும் மாற்றுதல் சரியல்ல. எனவே பொது வழக்குக்குக்கே முன்னுரிமை தர வேண்டும் என வேண்டுகிறேன். Misnomerகள் அனைத்து மொழிகளிலும் சகஜமாக உள்ளதுதான், தமிழும் வதிவிலக்கல்ல. த.வியில் என்னவோ தேவையற்ற Neo-Puritan Approach மேலோங்கி இருப்பதாக தோன்றுகிறது. இதை குறைத்துக்கொள்ளல் வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. βινόδ  வினோத்రచనలు 07:01, 2 பெப்ரவரி 2008 (UTC)

தொல்லுயிர் எச்சம் பரவலாகப் பாவிக்கப்பட்டுள்ளது. புதைபடிவம் நான் கேள்விப்படவில்லை.--Kanags \பேச்சு 07:14, 2 பெப்ரவரி 2008 (UTC)
தமிழ் நாட்டுப்பாடநூலில் புதைபடிவம் என்றே உள்ளது. அதை அடிப்படையாகக்கொண்டே தமிழக ஊடகங்கள் இந்த சொல்லாட்சியை பயன்படுத்துகின்றன. இலங்கை பாட நூல்களில் என்ன பயன்படுத்துகின்றனர் ? βινόδ  வினோத்రచనలు 07:41, 2 பெப்ரவரி 2008 (UTC)