பேச்சு:தொல்காப்பியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொல்காப்பியம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


காலம்[தொகு]

தொல்காப்பியம் தலைசங்க காலத்தில் பாண்டிய மன்னர்களால் அரங்கேற்றப்பட்டது.ஆனால் இக்கட்டுரையில் கடைச்சங்க காலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.--நிரோஜன் சக்திவேல் 01:42, 17 பெப்ரவரி 2007 (UTC) மேலும் இத்தகவலைப் பெற்றவர் எங்கிருந்து பெற்றவர் எனக் குறிக்கவும்.அது எந்த காலத்தகவல் எனவும் தெரிவிக்கவும்.--நிரோஜன் சக்திவேல் 01:53, 17 பெப்ரவரி 2007 (UTC)

தொல்காப்பியத்தைப் பொதுவாக இடைச் சங்ககாலத்து நூல் என்பர். தலைச் சங்க காலத்து இலக்கண நூல் அகத்தியம் என்பர். இதெல்லாம் உறுதியுடன் நிறுவப்பட்ட முடிவுகள் அல்ல. தொல்காப்பியத்தின் பெரும்பகுதி (இடைச் செருகல்கள் நீங்கலாக) கி.மு 200-300க்கு முற்பட்டது என்பதில் ஐயம் இல்லை.இடைச் செருகல்கள் கி.பி. 5-10 ஆவது நூற்றாண்டுகளாகவும் இருக்ககூடும். கி.மு 500, 700, 1000 என்று சொல்வதெல்லாம் ஏற்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. காலம் கணித்தவர்களின் பெயர்கள் கட்டுரையில் உள்ளது. அவர்கள் எல்லோரும் புகழ் பெற்ற அறிஞர்கள்.--செல்வா 02:04, 17 பெப்ரவரி 2007 (UTC)

தொல்காப்பியம் கடைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் ஆனால் 7000 கி.மு என இப்புத்தகத்தில் 2001 இல் வந்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது அதுதான் கேட்டேன்.சில வேளை அவ்வறிஞர்கள் எந்த ஆண்டுக் காலத்தவர் என்று ஏனெனில் எனக்குத் தெரியாது.--நிரோஜன் சக்திவேல் 02:16, 17 பெப்ரவரி 2007 (UTC)

மேலும் இது மிக்கவும் சிக்கலானது காரணம் இப்புதகத்தில் தலைச்சங்க காலம் என்க் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனாலும் நீங்கள் கூறுவதற்கிணைய இருந்தாலும் சரி சரியானதகா இருந்தால் சரி.எதற்கும் இவ்வாறான தகவல் சிக்கல்கள் உள்ள இக்கட்டுரைகளினை என்னுடைய பாண்டியர் கட்டுரையினையும் சேர்த்து தனியே ஒரு பட்டியலில் இட வேண்டும்.--நிரோஜன் சக்திவேல் 02:20, 17 பெப்ரவரி 2007 (UTC)

தெ.பொ.மீ, வையாபுரிப் பிள்ளை, இலக்குவனார் ஆகியோர் உலகப் புகழ் பெற்ற ஆய்வாளர்கள். தமிழில் கி.மு 300க்கு முன் உள்ள உறுதியான வரலாற்று சான்றுகள் இல்லை. அண்மையில் கி.மு 1000 ஆண்டளவில் உள்ள சில அகழ்வாராய்ச்சிக் குறிப்புகள் தமிழ்நாட்டிலேயே கிடைத்துள்ளது (சிந்து வெளி எழுத்துக்களுடன்). அறிவியல் முறைப்படி நிறுவப்படும் உறுதி பயக்கும் சான்றுகளின் அடிப்படையில் சற்று குறைத்தே மதிப்பிடுவது நல்லது. தமிழ்ப் பண்பாடு கி.மு 10,000 ஆகக் கூட இருக்கலாம், ஆனால் உறுதி பயக்கும் சான்றுகளின் அடிப்படையிலேதான் நாம் கட்டுற்று நிற்க வேண்டும். கி.மு 300க்கு முன்னர் உள்ள அரசர்கள் பற்றிய செய்திகள் உண்மையாக இருக்கும் என்றே நானும் நம்புகிறேன், ஆனால் அவர்கள் கால கி.மு 500, 700 என்பதெல்லாம் போதிய சான்றுகள் இல்லாமல் உறுதி செய்யமுடியாது. தோராயமாக எடுத்துரைக்கலாம்.--செல்வா 03:03, 17 பெப்ரவரி 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:40, 14 மே 2007 (UTC)[பதிலளி]

உரைநூல் எங்கு கிடைக்கும்?[தொகு]

தொல்காப்பியம் உரைநூல் தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்? தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

நன்றி. V4vijayakumar 14:46, 22 மே 2007 (UTC)[பதிலளி]

தமிழ் நாட்டில் எங்குகிடைக்கும் என்பதை அறியேன் இணையத்தில் http://www.tamil.net/projectmadurai/pub/pm0100/tolkap.pdf ஊடாகப் பார்க்கலாம். தவிர விக்கிநூல்களில் உண்டு (இது விக்கிமூலத்திற்கு மாற்றப்படலாம் என்பதால் இணைப்பைத் தரவில்லை) --Umapathy 15:00, 22 மே 2007 (UTC)[பதிலளி]

மதுரைத் திட்டத்தில் உள்ளது தொல்காப்பியம் மூலம் மட்டுமே. உரைகள் இல்லை. தமிழ் நாட்டிலுள்ள பெரும்பாலான புத்தக விற்பனை நிலையங்களில் பல பழைய, புதிய உரையாசிரியர்கள் எழுதிய உரையுடன் கூடிய தொல்காப்பியம் பல்வேறு அளவுகளில் விற்பனைக்கு உண்டு. பொதுவாக இவை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று தனித்தனியாகவே உள்ளன. நான் அண்மையில் சாரதா பதிப்பகம் வெளியிட்ட இளம்பூரணரின் உரையுடன் கூடிய மூன்று பகுதிகளையும் சென்னையில் இந்திய ரூபா 200 க்கு வாங்கினேன். Mayooranathan 15:47, 22 மே 2007 (UTC)[பதிலளி]
விக்கிமூலத்தில், இவ்வாறான பழைய உரைகளையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். Mayooranathan 15:47, 22 மே 2007 (UTC)[பதிலளி]

மாற்றங்கள்[தொகு]

அநாமதேய பயன்ர் செய்த மாற்றங்களை சரிபார்க்கவும் வினோத் 08:04, 14 டிசம்பர் 2007 (UTC)

சேர்க்கப்பட்ட உரைக்கு முன் சரியான மேற்கோள்களைக் குறிப்பிடவும். No Original Research வினோத் 08:06, 14 டிசம்பர் 2007 (UTC)

அநாமதேய பயனருக்கு[தொகு]

மீண்டும் மீண்டும் வார்ப்புருக்களை நீக்கும் அநாமதேய பயனரே, உலகில் எழுத்து முறை தோன்றியதே கி. மு 2000ஆம் ஆண்டு அளவில் தான் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே கி.மு எழாயிராமாவது ஆண்டில் தொல்காப்பியம் எழுதப்பட்டு இருக்கிறது என்பது தங்களுடைய சொந்த ஆய்வே அதற்கு எந்த வித ஆதாரமும் கிடையாது. தயவு செய்து வார்ப்புரு:சொந்த ஆய்வு வார்ப்புருவை நீக்கும் முன். இதற்கு பதில் தந்து விட்டு வார்ப்புருவை நீக்கும். மேலும் தாங்கள் இங்கே பயனர் கணக்கை துவங்கிய பிறகு வார்ப்புருவை நீக்க வேண்டும் என வேண்டுகிறேன்(பயனர் கணக்கை தொடங்குவது மிகவும் எளிதாக செயல் :-) ). மேலும் உங்களுடைய கருத்துகளை நீங்கள் மேலும் உறுதியாக முன் வைக்க இது உதவிகரமாக இருக்கும் வினோத் 02:40, 15 டிசம்பர் 2007 (UTC)

ஆதாரம் தேவை...புத்தாய்வு ???[தொகு]

பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதமாக இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள்.இப்போது தமிழ் வருடத்தின் ஆரம்பம் சித்திரை என இருக்கிறது. ஆனால், தொல்காப்பிய காலத்தில் வருட ஆரம்பமாக ஆவணி சொல்லப்படுகிறது. ஆயிரம் வருஷத்திற்கு ஒருமுறை வருட ஆரம்பமே மாறுகின்றது. ஆவணியில் ஆரம்பித்த வருடம் 1000 வருடங்களுக்குப் பிறகு புரட்டாசியில் ஆரம்பிக்கிறது. பின்னர் ஐப்பசி கார்த்திகை மார்கழி தை மாசி பங்குனி சித்திரை என்று 9 மாதங்களும் வருஷ ஆரம்பங்களாக மாறுவதால் ஒன்பது ஆயிரம் வருடங்கள் என ஆகின்றன.

இந்த 9 ஆயிரம் வருடத்தில் இப்போதுள்ள கி.பி. 2 ஆயிரம் வருடம் போக, மீதி 7 ஆயிரம் வருடங்களை 7 ஆயிரம் (கி.மு.) என்று நிர்ணயித்தால், அதுதான் தொல்காப்பியம் தோன்றிய காலம் என சிலர் கருதுகிறார்கள்.இவர்கள் வானியல் அறிஞர் சினீவாசராகவன் அவர்களின் கணக்கை வைத்துத்தான் இந்தக் கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள்.

−முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நூன் மரபு --> நூலின் மரபு.[தொகு]

மூல ஓலையில் இருக்கிறபடி, நூலின் மரபு என்று எழுதினால் எளிமையாகவும், தெளிவாகவும் இருக்கும்தகவலுழவன் 14:13, 13 டிசம்பர் 2008 (UTC)

இடைச்செருகல் கருத்து[தொகு]

விளக்கத்தில், இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், பலரின் முயற்சியால் வெவ்வேறு காலகட்டங்களில் இந்நூல் உருவாக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது

இந்தக் கூற்றை இவ்வாறு திருத்திக்கொள்வதுநல்லது.
தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

பலரின் பல்வேறு காலக் கூட்டுமுயற்சி என்பது தொல்காப்பியரையும் தொல்காப்பியத்தையும் கொச்சைப்படுத்தும் தொடர். இதனை உடனே மாற்றுங்கள். இதனை நான் செய்தால் தடி எடுத்தவன் தண்டல்காரன் நிலை அமைந்துவிடும். --Sengai Podhuvan 06:49, 10 மே 2011 (UTC)[பதிலளி]

சான்றுடன் நீங்கள் பரிந்துரைத்தபடி மாற்றியுள்ளேன், ஐயா. -- சுந்தர் \பேச்சு 07:12, 10 மே 2011 (UTC)[பதிலளி]

அதிகாரச் செய்தித் தொகுப்பு[தொகு]

மூன்று அதிகாரங்களுக்கும் தந்துள்ளனேன். புகுபதிவு செய்யாமல் தந்ததால் தொகுத்தவர் பெயரில் என் பெயர் இல்லை. போகட்டும். மக்களுக்குத் தெரியவேண்டிய செய்திகளை எளிமைப்படுத்தித் தந்துள்ளேன் என்னும் நிறைவு. --Sengai Podhuvan 17:04, 10 மே 2011 (UTC)[பதிலளி]

சொந்த ஆய்வு வார்ப்புரு எதற்கு ?[தொகு]

தொல்காப்பியம் கி. மு. ஏழாயிரத்தில் எழுதப்பட்டது என்ற கருத்து தனிப்பட்ட பயனருடையதாக இருக்கலாம். பேச்சுப் பக்கத்தில் அவரவர் அவரவர் கருத்தை இடுவது இயல்பு தானே ? இதற்கு ஏன் சொந்த ஆய்வு வார்ப்புரு ? --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:17, 27 மே 2012 (UTC)[பதிலளி]

மரு.கார்த்தி, நற்கீரன் கட்டுரையிலிருந்து வெட்டி ஒட்டிய பகுதி என்பதால் வார்ப்புருவும் சேர்ந்து வந்துவிட்டது என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 11:23, 30 மே 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொல்காப்பியம்&oldid=3747940" இலிருந்து மீள்விக்கப்பட்டது