பேச்சு:தைட்டானியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

இதன் தலைப்பைத் தைத்தேனியம் அல்லது தைத்தானியம் என்று தமிழ்ப்படுத்தினால் என்ன?--பாஹிம் (பேச்சு) 02:09, 2 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆம் தைத்தானியம் அல்லது தைத்தேனியம் என மாற்றலாம். தைட்டேனியம் என்றும் கூட மாற்றலாம். இந்தியாவின் முக்கிய நகரங்கள் போல், தனிமங்களின் பெயர்களும் ஒரே சீராக எல்லா இடங்களிலும் குறிப்பிடப்படாமல் இருப்பது இடையூறாக உள்ளது. தமிழ் முறைக்கு ஏற்றவாறு ஒரே சீராக எல்லா இடங்களிலும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.அண்மையில் தமிழ்நாடு அரசிதழில் (Gazette) (டிசம்பர் 5, 2012, கார்த்திகை 20, திருவள்ளுவர் ஆண்டு 2043) ஐதரசன் என்று தெளிவாகப் பதிவாகி உள்ளது. அதே போல Titanium powder என்பது தைட்டானியம் தூள் எனப் பதிவாகி உள்ளது. Titanium tetra chloride = தைட்டானியம் தெட்ரா-குளோரைடு எனப் பதிவாகி உள்ளது. எனவே தைட்டானியம் என்று இடலாம் என்பது என் கருத்து. --செல்வா (பேச்சு) 02:49, 2 சனவரி 2013 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையின் தலைப்பைத் தைட்டானியம் என்று மாற்றிவிடுகின்றேன். யாரும் மறுப்பும் சொல்லவில்லை. அரசிதழிலும் தைட்டானியம் என்று உள்ளது.--செல்வா (பேச்சு) 19:21, 3 சனவரி 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தைட்டானியம்&oldid=2523182" இலிருந்து மீள்விக்கப்பட்டது