பேச்சு:தேவார வைப்புத் தலங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவார வைப்புத் தலங்கள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தேவார வைப்புத் தலங்கள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


முழுமையான பட்டியல்[தொகு]

பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியுள்ள தேவார வைப்புத்தலங்களில் 147 கோயில்கள் தரப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நோக்கும்போது இப்பட்டியலில் தரப்பட்டுள்ள கோயில்கள் எண்ணிக்கை முழுமையடையாமல் உள்ளது. அவை விரைவில் சேர்க்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:28, 25 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியுள்ள தேவார வைப்புத்தலங்கள் என்னும் நூலில் (வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009) 147 தலங்கள் வைப்புத்தலங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டு தற்போது சேர்க்கப்படுகிறது. மேற்கொண்டு மாற்றம் ஏதுமிருப்பின் உரிய திருத்தம் மேற்கொள்ளப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:00, 30 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

மேற்படி நூலில் ஆந்திரம் என்ற தலைப்பில் நான்கு கோயில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் மூன்று கோயில்கள் (குக்குடேஸ்வரம், திரிபுராந்தகம், விவீச்சுரம்) மட்டுமே அகரவரிசைப்படி அமைந்துள்ள 147 கோயில்களின் பட்டியலில் உள்ளன. நாடுகள் வாரியாக அமைந்துள்ள பிறிதொரு பட்டியலில், ஆந்திரம் என்ற பிரிவில் திருக்காரிக்கரை ராமகிரி என்ற தலைப்பில் ஒரு வைப்புத்தலம் இந்நூலில் 388ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுதி செய்தபின் உரிய இடத்தில் இக்கோயில் இணைக்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:40, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

காரிக்கரை என்று பட்டியலில் உள்ளதே திருக்காரிக்கரை ராமகிரி என்று ஆந்திரம் பட்டியலில் உள்ளதை தற்போது அறிய முடிந்தது. தற்போது உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:29, 5 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

தீயனூர் ஜமதக்னீஸ்வரர் கோயில் பு.மா.ஜெயசெந்தில்நாதன் நூலில் (தேவார வைப்புத் தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை) உள்ள 147 தலங்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலில் இத்தலத்தின் பெயர் காணப்படவில்லை. பிற இடங்களிலும் விவரம் காணப்படவில்லை. இது தேவார வைப்புத்தலமா என்பது உறுதி செய்யப்படவேண்டியுள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:24, 7 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

சேலூர்[தொகு]

மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை ஆகிய இரு ஊர்களுமே சேலூர் என்று கூறப்படுவதாக பூ.மா.ஜெயசெந்தில்நாதன் தன்னுடைய தேவார வைப்புத்தலங்கள் என்னும் நூலில் (ப.233) குறிப்பிடுகிறார். எனவே சேலூர் என்ற பதிவில் மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை என்ற இரு கோயில்களும் தனித்தனிப் பதிவாக தொடங்கப்பட்டுள்ளன. கூடுதலாக புதிய விவரம் பெறப்படும்போது பதிவு சரிசெய்யப்பட்டு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:44, 14 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

வைப்புத்தலங்கள் பதிவு 147 நிறைவு[தொகு]

தேவார வைப்புத் தலங்கள் 147ஐப் பற்றியும் உரிய இணைப்புகள் தந்து பதிவுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இல்லாத கோயில்களுக்கு புதிய பதிவுகள் தொடங்கப்பட்டன. முன்னரே இருந்த பதிவுகள் மேம்படுத்தப்பட்டு, உரிய இணைப்புகளும் தரப்பட்டன. வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சென்று புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, கூடுதல் செய்தியுடன் தொடர்பான கோயிலைப் பற்றிய பதிவு அவ்வப்போது மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:41, 23 பெப்ரவரி 2019 (UTC)