பேச்சு:தேற்றாத்தீவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊரின் மக்கள் தொகை, அஞ்சல் குறியீட்டு எண், தொழில், தொலைப்பேசி குறியீட்டு எண் முதலிய விவரங்கள் தந்தால் நலம். இவ்வூரை அறிந்தவர்கள் இதன் குறிப்பிடத்தக்கமையைப் பற்றி தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 13:51, 11 மே 2014 (UTC)[பதிலளி]

தராவிட்டால் நீக்கப் போகிறீர்களா?--Kanags \உரையாடுக 08:35, 12 மே 2014 (UTC)[பதிலளி]
Kanags, ஏகாந்தன் கட்டுரையில் துரித நீக்கல் வார்ப்புருவும் குறிப்பிடத்தக்கமை வார்ப்புருவும் இணைத்துள்ளீர்கள். அங்கு நீங்கள் கோரிய மேம்பாடு, தகவல் கிட்டாவிடில் என்ன செய்வீர்கள் என்று அறியலாமா?--இரவி (பேச்சு) 10:26, 12 மே 2014 (UTC)[பதிலளி]
எதையும் எதையும் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள்? புகழ் பெற்ற ஒரு ஊர். கூகுளில் தேடுங்கள் கிடைக்கும். அவ்வூரில் கோயில்கள் (இரு மதங்கள்), பொது நூலகம், பிரபலமான கலைக்கல்லூரி இன்னும் பல உள்ளன., இவை இருந்தால் அக்கிராமத்தில் எவ்வளவு பேர், எப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள் என ஊகியுங்கள். ஊர் பற்றி எழுத (இரண்டு வரி தவிர) குறிப்பிடத்தக்க அளவீடு ஒன்று இங்கு உள்ளதா? வாழும் நபர் பற்றி எழுத நிறைய குறிப்பிடத்தக்கமை வேண்டும். நபரின் வலைத்தளம் போதுமானதாகுமா? இந்தக் கட்டுரையே பலர் ஆமோதிக்க நீக்கப்பட்டது.--Kanags \உரையாடுக 10:45, 12 மே 2014 (UTC)[பதிலளி]
Kanags, நான் எதனையும் எதனோடும் ஒப்பிடவில்லை. ஒரு கட்டுரையில் போதுமான தகவலும் இல்லை குறிப்பிடத்தக்கமையும் இல்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று தான் கேட்டேன். தேற்றாத்தீவு பற்றி தெளிவு பெறும் தகவல் கட்டுரையில் இல்லை, எனக்கு நேரடி அனுபவமும் இல்லை என்பதால் தான் அறிந்தவர்கள் தெளிவுபடுத்தும் படி கோரினேன். கட்டுரைப் பக்கத்தில் குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு கூட இணைக்கவில்லை. இதில் என்ன தவறு? தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஊராட்சி நிலையில் உள்ள ஊர்களைப் பற்றி கலைக்களஞ்சியக் கட்டுரைகள் எழுதலாம் என்று கருதுகிறேன். நீங்கள் கூறியது போல் பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், பல சமயக் கோயில்கள் யாவும் பொதுவாக ஊராட்சி நிலையிலேயே காணப்படும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊராட்சியின் கீழும் பல ஊர்கள் வரும். இந்த ஊர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஊராட்சித் தலைவரையும் உள்ளூர் கிளைத் தலைவரையும் தேர்ந்தெடுப்பார்கள். எங்கள் ஊர் இப்படி ஒரு கிளையின் கீழ் வரும். சில குடும்பங்கள், இரு நூற்றுக்குக் குறைவான மக்கள் தொகை உடைய ஊர். இதனைப் பற்றி கலைக்களஞ்சியத்தில் எழுத ஒன்றும் இல்லை. எனவே, இலங்கையின் ஊராட்சி முறை அடிப்படையில் எந்த ஊர்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதலாம் என்று உங்கள் பரிந்துரைகளைத் தந்தால் உதவும். தேற்றாத்தீவு பற்றி நீங்கள் அறிந்த தகவலையும் கட்டுரையில் சேர்த்து விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 10:58, 12 மே 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேற்றாத்தீவு&oldid=1658904" இலிருந்து மீள்விக்கப்பட்டது