பேச்சு:தேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேனி எனும் தலைப்பிலான கட்டுரையை தேனி அல்லிநகரம் எனும் கட்டுரையுடன் இணைக்கலாம். இரண்டும் ஒரே ஊரைத்தான் சுட்டுகின்றன. இணைக்கப்பட்ட பின்பு கட்டுரையின் தலைப்பு தேனி-அல்லிநகரம் என்று இருக்க வேண்டும். தேனி - அல்லிநகரம் என்கிற பெயரில்தான் நகராட்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. --Theni.M.Subramani 02:24, 29 ஜூன் 2010 (UTC)

இணைக்கலாம். ஆனால் அதற்கு முன்னர், கட்டுரையில்:

\\மதுரையிலிருந்து சுமார் 76 கிமீ தொலைவில் உள்ளது தேனி. இந்நகரம் தேனி, அல்லிநகரம் என்கிற இரு ஊர்களை உள்ளடக்கியிருப்பதால் தேனி-அல்லிநகரம் நகராட்சி என்கிற பெயரில் 1964 ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது.// என்று எழுதப்பட்டுள்ளது. இதன்படி தேனி, அல்லிநகரம் என இரண்டு ஊர்கள் உள்ளது போல் தெரிகிறது. இக்கட்டுரையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 02:58, 29 ஜூன் 2010 (UTC)

கனக்ஸ் கவனத்திற்கு[தொகு]

தாங்கள் குறிப்பிட்ட செய்தி உண்மைதான். தேனி என்று குறிப்பிடப்படும் ஊரும், அல்லிநகரம் என்று குறிப்பிடப்படும் ஊரும் தமிழ்நாடு உள்ளாட்சித்துறையின் உள்ளாட்சி அமைப்பால் இணைக்கப்பட்டு தேனி - அல்லிநகரம் என்கிற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஊர் தமிழ்நாட்டின் வருவாய்த்துறையில் முந்தைய கிராமமான அல்லிநகரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்பிலுள்ள தேனி - அல்லிநகரம் என்ற பெயரும், வருவாய் அமைப்பிலுள்ள அல்லிநகரம் என்ற பெயரும் குறிப்பிட்ட துறைகளின் கீழ் தனித்தனியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தேனி மாவட்டத்தின் தலைநகராக தேனி என்ற பெயரிலேயே குறிப்பிடப்பட்டு வருகிறது. இருப்பினும், உள்ளாட்சி அமைப்பில் குறிப்பிடப்படும் தேனி - அல்லிநகரம் நகராட்சி என்கிற பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது. தேனி - அல்லிநகரம் நகராட்சி எனும் பெயரில்தான் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. மேலும் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் தேனி - அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் மற்றும் தேனி - அல்லிநகரம் நகர்மன்ற உறுப்பினர் என்றே தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பயன்பாட்டிலுள்ள பெயர்களே ஊர்களின் பெயராக இருந்து வருகின்றன. எனவே தேனி அல்லிநகரம், தேனி என்று தனித் தலைப்பிலுள்ள இரு கட்டுரைகளையும் இணைத்து தேனி - அல்லிநகரம் என்ற பெயரிலேயே ஒரு கட்டுரையாக்கி விடுவதுதான் சரியானது.--Theni.M.Subramani 03:24, 29 ஜூன் 2010 (UTC)

இணைத்திருக்கிறேன். பெயர் நடுவில் இடைக்கோடு வருமா என்று சரியாகத் தெரியவில்லை. அரசு பதிவுகளில் இடைக்கோடு இருந்தால் அப்பெயருக்கு நகர்த்தி விடுங்கள்--சோடாபாட்டில் 04:24, 11 நவம்பர் 2010 (UTC)

வழிமாற்று[தொகு]

அல்லிநகரம் - தேனி என்ற வழிமாற்று இருப்பதில் என்ன தவறு?--Kanags \உரையாடுக 12:00, 1 சூலை 2012 (UTC)

அல்லிநகரம் என்பது தேனி - அல்லிநகரம் நகராட்சியின் ஒரு பகுதி அவ்வளவுதான். இதற்கு ஏற்கனவே தேனி - அல்லிநகரம் என்கிற வழிமாற்று இருக்கிறது. தேனி - அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம், கருவேல்நாயக்கன்பட்டி போன்ற பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தவிர இந்நகராட்சியில் என். ஆர்.டி.நகர், கே.ஆர்.ஆர். நகர் போன்ற நகரின் முக்கியப் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இதுபோல் விரிவாக்கப் பகுதிகளில் பல்வேறு பெயர்களிலான ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு அவர் தேனியை பின்பகுதிக்குத் தள்ளி அல்லிநகரம் என்கிற பகுதியை முன்னிலைப்படுத்தவே தலைப்பை மாற்றியுள்ளார்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:10, 1 சூலை 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேனி&oldid=1151804" இருந்து மீள்விக்கப்பட்டது