உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தேநீர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல கட்டுரை ஸ்ரீஹரி. நன்றியும் பாராட்டுக்களும்--ரவி 09:28, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

தே+நீர் = தேநீர் என்பது தானே சரி??--Ravidreams 17:01, 27 பெப்ரவரி 2007 (UTC)Reply

சீனி, சர்க்கரை

[தொகு]

உமாபதி, தமிழ்நாட்டிலும் சீனி என்ற சொல் இருக்கிறது. கோவை பகுதிகளில் சீனி என்ற சொல்லே முதன்மை என்று நினைக்கிறேன்--Ravidreams 17:11, 27 பெப்ரவரி 2007 (UTC)Reply

நன்றி ரவி சர்க்கரை கட்டுரையும் சீனி நகர்த்துவோம். நான் தேனீர் கட்டுரையில் சர்கரை என்று ஆளப்பட்டதால் தமிழ வழக்கு என்று நினைத்தேன். இங்கே இலங்கையில் சர்க்கரை என்பது வெல்லத்தைக் குறிப்பிடுகின்றார்கள். --Umapathy 17:16, 27 பெப்ரவரி 2007 (UTC)Reply

தமிழ்நாட்டில், திருநெல்வேலி மற்றும் தென் மாவட்டங்களில் (ச்)சீனி என்பதுதான் பெருவழக்கு. சரக்கரை என்பது வடக்குத் தமிழ்நாட்டு வழக்கு. சீனாவில் இருந்து வந்ததால் சீனி. --செல்வா 17:24, 27 பெப்ரவரி 2007 (UTC)Reply

சர்க்கரை என்பது ஈழத்தில் வெல்லத்தைக் குறிப்பதால் சீனி என்ற தலைப்பில் கட்டுரை இருப்பது நன்றென்பதே என் கருத்தும். --கோபி 17:29, 27 பெப்ரவரி 2007 (UTC)Reply

சீனி என்ற பெயர் தமிழ்நாட்டு அறிவியல் புத்தகங்களில் இடம்பெறாத சொல் என்று நினைக்கிறேன். அதனால் சீனியை முதன்மைப்படுத்துவது சரியா என்று பார்க்க வேண்டும்? ஈழத்தில் வெல்லம் என்ற சொல்லே இல்லையா? மேலே தேநீர் Vs தேனீர் கேள்விக்கும் யாராவது பதில் தந்தால் நன்று--Ravidreams 17:34, 27 பெப்ரவரி 2007 (UTC)Reply

-) நல்ல மல்யுத்தம்தான். --Natkeeran 17:39, 27 பெப்ரவரி 2007 (UTC)Reply

ஈழத்தில் வெல்லம் என்றால் இனிப்பானதென்றே கருதப்படும். ஆரம்பத்தில் நான் சீனி என்பதை ஒரு வழிமாற்றியாகவே உருவாக்கினேன். காரணம் தமிழகத்தில் சீனி என்பதை விளங்கிக் கொள்ளமுடியாது என்றெண்ணியமையே ஆகும். ஈழத்தில் சர்க்கரை வெல்லத்தைக் குறிப்பதாலும் அதே வ்வேளை சீனி என்பது தமிழகத்தில் ஓரளவு பயன்படுவதாலுமே சீனி எனத் தலைப்பிடப் பரிந்துரைத்தேன். சர்க்கரையை பக்கநெறிப்படுத்தற் பக்கமாகப் பயன்படுத்தலாம்தானே... கோபி 17:46, 27 பெப்ரவரி 2007 (UTC)Reply

sugars என்ற பொருள்படும் அறிவியல் தமிழ் விசயங்களுக்கு சர்க்கரை என்பதை முதன்மைத் தலைப்பாகவும், உண்ணப்படும் சர்க்கரைக்கு சீனி என்றும் பயன்படுத்திப் பார்க்கலாம்--Ravidreams 19:19, 27 பெப்ரவரி 2007 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேநீர்&oldid=111175" இலிருந்து மீள்விக்கப்பட்டது