பேச்சு:தென்னிசு இரிட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனகு, இந்தப் பக்கத்தின் தலைப்பை தென்னிசு இரிட்சி என மாற்றலாம். முதற்கண் ட் வந்தபின் சி வந்தால் சி என்பது ததனே வல்லினமாகவே ஒலிக்கும், எனவே ரிட்ச்சி என்று இன்னொரு ச் தேவை இல்லை. ரிட்சி எனலாம். தமிழ் முறையில் இரிட்சி ஆகும். டென்னிசு என்றும் எழுதலாம். தென்னிசு என்று எழுதுவது ஒலிப்பிற்கும் எளிதாக இருக்கும், தமிழ் முறையாகவும் இருக்கும். --செல்வா 21:30, 15 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

ரிட்சி என்றால் Ritsi என்றல்லவா ஒலிக்க வேண்டும். Ritchie என்பதற்கு ச்சி தேவையாக இருக்கும். ஆராய்சி --> ஆராய்ச்சி.--Kanags \உரையாடுக 22:02, 15 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
அல்ல சிறீதரன். கட்சி, வெட்சி, ஆட்சி என்னும் சொற்களைப் பாருங்கள். சி என்னும் வல்லின உயிர்மெய்க்கு முன்னே தமிழில் வரத்தக்க வல்லின ஒற்று இருக்குமேயானால் சி என்பது வலித்து ஒலிக்கும். நீங்கள் சொன்ன ஆராய்ச்சி என்பதில் ய் என்னும் இடையினம் இருப்பதால், வல்லினமாக சி ஒலிக்க அதற்கு இனமான வல்லின ச் என்னும் ஒற்று வருகின்றது. --செல்வா 22:14, 15 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
Ritsi என்று ஒலிக்க வேண்டுமானால் ரிட்ஃசி என்று தமிழில் எழுதலாம் (இல்லாவிடில் (இ)ரிட்டிசி என்று எழுதலாம்). கிரந்தம் சேர்த்து எழுதுவதானால் ரிட்ஸி எனலாம். --செல்வா 22:19, 15 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
செல்வா, நானும் முதலில் ரிட்சி எனவே எழுத எண்ணியிருந்தேன். ஆனாலும் சந்திர போசு அவர்கள் மடலாடல் குழு ஒன்றில் ரிட்ச்சி என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். வேற்றுமொழிச் சொற்களை எழுதும் போது (கிரந்தம் தவிர்க்க வேண்டுமென்றால்) இலக்கணம் அவ்வளவாகப் பார்க்கத் தேவையில்லை, ஒலிப்பு முக்கியம் என்று கருதியே அவ்வாறு எழுதத் துணிந்தேன். உங்கள் ஆலோசனைப் படியே மாற்றி விடுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 22:31, 15 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

இவர் சி மொழியை உருவாக்கினார். கென் தாம்ப்சன், பிறையன் கேர்னிகன், டக்லசு மெக்கில்ராய், ஜோ ஒசானா போன்ற பெல் ஆய்வுகூட பொறியாளர்களுடன் இணைந்து யுனிக்சு இயங்குதளத்தை உருவாக்கினார் என்றிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 22:09, 15 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

இப்படியே மாற்றிவிடலாம்.--செல்வா 22:19, 15 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தென்னிசு_இரிட்சி&oldid=900594" இலிருந்து மீள்விக்கப்பட்டது