பேச்சு:தென்காசிப் பாண்டியர்கள்
Appearance
![]() | இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 19, 2012 அன்று வெளியானது. |
![]() | இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |
- கட்டுரை வடிவமைப்பு சரியாக அமைத்தல் நல்லது. வரிக்கு வரி தலைப்பு தேவையா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:12, 17 சூலை 2011 (UTC)
தேனி.எம்.சுப்பிரமணி,ஒவ்வொரு தலைப்பும் விரிவுப்படுத்தப்படும்.தென்காசி சுப்பிரமணியன்
இக்கட்டுரைக்கு ஆதாரங்கள் கோரப்பட்டுள்ளது. நூலக புத்தகங்களை காட்டலாமா? மேலும் தென்காசி பாண்டியர் 1400க்கு மேலே ஆட்சி கொண்டிருந்தனர். இலக்கிய ஆதாரங்களில்லை. ஆனால் தென்காசி தல புராணம், பாண்டியர் வரலாறு, தமிழ்நாட்டுப்படைத்தளங்கள் போன்ற புத்தகங்களுள்ளது. ஆசிரியர் தெரியவில்லை. தென்காசி சுப்பிரமணியன்
- ஆம், நூலகப் புத்தகங்கள் ஆதாரமாகத் தரப்படலாம். ஆசிரியர் பெயர், நூல் பெயர், வெளியீடு, ஆண்டு, ISBN (இருந்தால்) போன்றவை ஆதாரமாகத் தரலாம்.--Kanags \உரையாடுக 21:18, 17 சூலை 2011 (UTC)
- தென்காசி சுப்பிரமணியன் தலைப்புகள் விரிவுபடுத்தப்படும் என்கிற செய்திக்கு நன்றி. தாங்கள் ஒவ்வொரு தலைப்பு குறித்தும் எழுதி முடித்துவிட்டு அடுத்தத் தலைப்பிற்குப் போகலாம். கட்டுரையின் மேல் பகுதியில் {{}} என்ற அடைப்புக் குறிக்குள் underconstrucion என்று போட்டுவிட்டால் நல்லது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:00, 18 சூலை 2011 (UTC)
- வேறுபெயர்கள் தலைப்பின்கீழ் மூன்றாவதாக வரும் பெயர் ஆனந்தக்கூத்தனார் என்பது சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எனக்கு அது ஆள் பெயர்போல் தோன்றுகிறது. இது எனது ஆதாரமற்ற சந்தேகமே.
- ஒற்றைக்கல் சிலைகள் தலைப்பின் கீழ் 9 மற்றும் 10 இரண்டும் பாவை என்றே உள்ளதே சரிதானா?--Booradleyp 16:50, 31 சனவரி 2012 (UTC)
ஆனந்த கூத்தனூர் அவசரத்தில் ஆனந்தக்கூத்தனார் ஆனது. பாவைகள் கோயிலின் இரண்டு பக்கமும் நிற்பவை. நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் 17:22, 31 சனவரி 2012 (UTC)
- தென்காசியாரே பாண்டியரின் படம் எடுக்கப்பட்ட கோவிலின் பெயரையும் விளக்கத்தில் அளித்தால் சிறப்பாக இருக்குமென நம்புகிறேன். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:39, 4 சூலை 2013 (UTC)