பேச்சு:துலுக்க நாச்சியார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துலுக்க நாச்சியார் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


துலுக்க நாச்சியாரைப் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவைக்கு அதாரங்கள் போதாது. இராமனுசரின் காலத்தில் (1017-1137) டெல்லியில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எந்த இசுலாமிய அரசும் இல்லை. 1206ல் தான் முதலாவது இசுலாமிய ஆட்சி (மம்லுக் வம்சம்) இந்தியாவில் ஏற்பட்டது. அதற்கு முன்பு படையெடுத்து வந்த கசினி முகம்மது, கோரி முகம்மது கூட விந்திய மலைத்தொடரை தாண்டி தென்னிந்தியாவுக்கு வரவில்லை. எனவே இவரைப் பற்றிய கதை ஒரு தொன்மமாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறாயின் கட்டுரை நடையில் அதற்குறிய மாற்றம் செய்யப்பட வேண்டும்.--அராபத் (பேச்சு) 10:55, 13 மே 2013 (UTC)[பதிலளி]

மாலிக் கபூர் போன்ற எண்ணற்ற படையெடுப்புகள் தென்னிந்தியாவில் நிகழ்ந்துள்ளன என நினைக்கிறேன். நிறைய சிதைந்த சிவாலயங்களைப் பற்றி அறியும் பொழுது அவை ஏதேனும் சுல்தானால் பீரங்கி வைத்து தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கின்றார்கள். இது தொன்மமாக தெரிந்தால், அதற்கேற்றவாறு மாற்றம் செய்துவிடுங்கள். வரலாற்று ஆசிரியர்களுக்கு இவை உதவக்கூடும். துலுக்க நாச்சியாருக்கும் இராமனுசருக்கும் என்ன தொடர்பு? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:13, 8 சனவரி 2014 (UTC)[பதிலளி]