பேச்சு:துடிவிண்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித்திட்டம் -வானியல்.png துடிவிண்மீன் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு[தொகு]

இக்கட்டுரை பிழையான தலைப்பை கெண்டுள்ளதுடன் பல தவறான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இதன் தலைப்பை மாற்றி தகவல்களை திருத்தவுள்ளேன்.
துடிப்பலை என்பது சீரான இடைவெளியில் நிகழும் துடிப்பு (Pulse) ஆகும்.

ஆங்கிலத்தில் Pulsar என்பது Pulsating Star இன் சுருக்கமாகும். இதை தமிழில் துடிவிண்மீன் (“துடிக்கும் விண்மீன்” இன் சுருக்கம்) என்றுஅழைக்கலாம் என நினைக்கிறேன். இதைவிட சிறந்த பெயர் இருந்தால் பரிந்துரைக்கவும்.

நன்றி B Thanushan

அப்படியே மாற்றுங்கள்.--Kanags \உரையாடுக 11:38, 23 பெப்ரவரி 2016 (UTC)

பயனர்:B Thanushan தலைப்பு மாற்ற வேண்டாம். தவிர நொதுமி விண்மீன் வெளியிடுவது தான் இந்த துடிப்பலைகள். நொதுமிக்கு வேறு சில குணங்களும் உண்டு. ஒவ்வொறு குணத்துக்காகவும் தனிப்பெயர் வைக்கமுடியாதல்லவா.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:17, 24 பெப்ரவரி 2016 (UTC)

தென்காசி, //துடிப்பலை என்பது சீரான இடைவெளியில் நிகழும் துடிப்பு (Pulse) ஆகும்// என்பதைக் கவனித்தீர்களா? துடிப்பலை ஒரு பொதுவான சொல். pulsar என்பதை பல்சார் எனக் கூறலாம். அல்லது துடிவிண்மீன் எனக் கூறலாம். pulsar என்பது ஓர் அலை அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். //pulsar (short for pulsating radio star) is a highly magnetized, rotating neutron star//. தனுசன் கூறியது போல கட்டுரையில் தகவல் பிழை உண்டு.--Kanags \உரையாடுக 01:47, 25 பெப்ரவரி 2016 (UTC)

ஆமா இப்ப தான் கவனிக்குறேன். மாத்திறலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:06, 25 பெப்ரவரி 2016 (UTC)

தமிழில் வெளிவரும் அறிவியல் நூல்களில் பெருமளவு தகவல் பிழைகள் உள்ளன.--Kanags \உரையாடுக 09:58, 25 பெப்ரவரி 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துடிவிண்மீன்&oldid=2031389" இருந்து மீள்விக்கப்பட்டது