பேச்சு:துங்குசுக்கா நிகழ்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பக்கத்தின் பெயரை துங்குசுக்கா நிகழ்வு என்பதற்கு நகர்த்தலாமா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:40, 13 சனவரி 2019 (UTC)[பதிலளி]

துங்குக்கா நிகழ்வு என்றே நகர்த்தப்பட வேண்டும். வடமொழியிலிருந்து தமிழாக்கும் போது ஸ்தான் --> ஸ்தானம் --> தானம் என்பதில் வருவது போன்று ஸ் விட்டுவிடப்படுகிறது. பாக்கிஸ்தான் --> பாக்கித்தான் ஆனதும் இவ்வாறே.--பாஹிம் (பேச்சு) 13:08, 13 சனவரி 2019 (UTC)[பதிலளி]

" எனது கருத்து என்னவென்றால் வேற்றுமொழிப்பெயர்களைத் தமிழ்படுத்தும் போது மூலத்துக்கு மிகவும் நெருக்கமாகவே மொழிபெயர்க்க வேண்டும்.தமிழில் வேற்றுமொழி எழுத்துகளுக்கு இணையான எழுத்துகள் இல்லாத விடத்து மாற்று வழிகளில் பெயரை மாற்றலாம்.ஆனால் இங்கு தமிழில் ஸ எழுத்து உள்ளது

@Fahimrazick: நீங்கள் சொல்வது போல் எழுத வேண்டும் என்றால், தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல தலைப்புகளின் பெயரை மாற்றுவது போல் இருக்குமே?? மாற்றலாமா?? உதாரணம்: இஸ்லாம் என்பதை இசுலாம் என்று தான எழுதுகிறோம். நீங்கள் சொல்வது போல் எழுதினால், அதன் பெயரே மாறுபடுகிறதே?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:44, 13 சனவரி 2019 (UTC)[பதிலளி]
துங்குஸ்கா நிகழ்வு என மாற்றலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:30, 13 சனவரி 2019 (UTC)[பதிலளி]
துங்குசுக்கா நிகழ்வு என்று நகர்த்தலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 02:24, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]
துங்குஸ்கா வடமொழி அல்ல. துங்குசுக்கா நிகழ்வு என எழுதுவதே சிறந்தது.--Kanags (பேச்சு) 08:05, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]
உருசிய மொழியில் டி என்ற ஒலிப்பு இல்லை. T - த் (உ+ம்: Tamil Тамил டமில் என ஒலிப்பதில்லை. தமில் என்றே ஒலிக்கப்படுகிறது.
India - உருசியத்தில் Индия - இண்டியா அல்ல, இந்தியா என்றே ஒலிக்கும்.--Kanags (பேச்சு) 08:28, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]