பேச்சு:துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில்
Appearance
பழமையான கோயில்
[தொகு]பழமையான இக்கோயிலின் செங்கல் கட்டுமானத்திலான இரு கோபுரங்களும், அவற்றுக்கிடையே இடது புறத்தில் காணப்படுகின்ற கருங்கல் கட்டுமான மண்டபமும் சிதிலமுற்ற நிலையில் இருப்பதைக் காணமுடிந்தது. இக்கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் அமைப்பைப் போன்று உள்ளது. உள்ளே செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ முடியாத நிலையில் இடிபாடுகள் காணப்படுகின்றன. விரைவில் திருப்பணி நடைபெற உள்ளதாக உள்ளூரில் தெரிவித்தனர். அருமையான கலைப் பெட்டகம் பொலிவிழந்து காணப்படுவதை நேரில் சென்று பார்த்தபோது உணரமுடிந்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும்போது உரிய தகவல்கள் மேலும் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:47, 10 மார்ச் 2017 (UTC)