பேச்சு:தீ நுண்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg தீ நுண்மம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

அதிநுண்நச்சுயிர் என்பது வழக்கத்தில் உள்ளதா? இல்லையெனில் வடமொழியான அதியைத் தவிர்த்து மிகு அல்லது வெகு எனப் பயன்படுத்தலாம். -- Sundar \பேச்சு 10:33, 27 ஜூலை 2005 (UTC)

Only நச்சுயிர் (Virus means poison) is suggested at TVU. But I was not convinced with this word usage and coined the word அதி நுண் நச்சுயிர் beacuse நச்சுயிர் gives the feeling that it is the ony harmful microorganism ( which is not true)..so by adding அதி நுண் I meant to say it is the smallest harmful stuff...watch the word stuff..because technically virus is not a living being and cannot be classified as micro organism..so ultimately all the words நச்சுயிர், அதி நுண் நச்சுயிர் are not technically correct but I hope these will be understood popularly by people as Virus. We come up with a word like தீ நுண்மம் (reflecting the actual meaning of virus)..But I am hesistant to coin new technical words without not many people knowledgable in Tamil and Biology at the same time..--ரவி (பேச்சு) 10:58, 27 ஜூலை 2005 (UTC)
தீ நுண்மம் sounds perfect. We can slowly introduce things with a "can also be called as" clause. By the way, I've filed a bug on the partial wikilinking of a word. I've CC-ed your Yahoo! id. Check that out. -- Sundar \பேச்சு 11:13, 27 ஜூலை 2005 (UTC)
Ya,it sounds good. I dashed upon the word தீ நுண்மம் only while writing reply to u..will include the word in the article and rewrite it soon--ரவி (பேச்சு) 11:38, 27 ஜூலை 2005 (UTC)

சுமார் ஓராண்டுக்குப் பின் பார்க்கும் என் நினைப்புகள்: Virus is not the smallest stuff. Things like prion are far smaller and there are protein strands which are deadly but not as a poisson, but more like prion which are like virus. வைரஸ், ப்ரையான் முதலியவை தனியே இயங்கும் உயிரி இல்லைதான், எனினும், வரைஸ் போன்றவை செல்களைப் (கண்ணறைகளைப்) பற்றி 'உயிர்' வாழ்வன (தற்பெருக்கம் செய்து இயங்குவன, இவற்றை உயிர் வாழ்வன என்று சொல்லுவது பொருந்தாது). உயிரியாய் இல்லாவிட்டாலும், உயிர்க்கூறு போன்றவை. தீ நுண்மம் என்பது நல்ல கருத்து என்றாலும், நுண்மம் என்பது சரியாகத் தோன்றவில்லை (stuff என்றபோதும்). தீநுண்மி எனலாம். துரிசு என்னும் சொல் copper suphate ஐக் குறிக்கும். இது ஒரு நச்சுப்பொருள் (பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்துவதுண்டு என்று நினைக்கிறேன்). துரிசு என்றால் துக்கம், துன்பம் என்றும் பொருள். தமிழ் லெக்சிகனைப் பார்த்தால் எத்தனை சொற்கள் துரிசு என்னும் பொருளில் உள்ளது என பார்க்கலாம். கீழே துரிசு என்பதின் பொருளை தமிழ் லெக்சிகனில் இருந்து இடுகிறேன்:

துரிசு (p. 1980) [ turicu ] n turicu . [M. turišu.] 1. Fault, crime; குற்றம். தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் (தேவா. 549, 8). 2. Sorrow, affliction, distress; துக்கம். (பிங்.) 3. Perversity; கிருத்திரி மம். தொண்டே யுனக்கா யொழிந்தேன் றுரிசின்றி (திவ். திருவாய். 9, 8, 6). 4. Blue vitriol. See மயிற்றுத்தம். (பதார்த்த. 1115.)

எனவே துரிசு என்றும் வைரஸை அழைக்கலாம்.

prion என்பதற்குப் பிரையான் என்றே கூறலாம், ஏனெனில், பிரைதல் என்றால் திரிதல் என்னும் பொருளது (பால் திரிந்து தயிராவதற்கு பிரைதல் என்று பெயர்; பிரை மோர் என்றும் புரை மோர், உறைமோர் உறைகுத்துதல் என்பதெல்லாம் ஒன்றுதான். திரியச்செய்யும் பொருட்களை பிரை என்று சொல்லலாம்). விளக்கம் தேவை எனில் புரதப் பிரை எனலாம். பிரையான் என்பது என்பது என் பரிந்துரை.

நுண்மம் என்பது கணிதவியலில், நுண்கலனத்தில் infinitismal என்பதற்கும் பயன் படுத்துகிறோம். மேலும் நுண்மம் என்பது மிகபொதுவான சொல் (தீ என்னும் அடைமொழி பிரித்துக் காட்டுகிறது என்றாலும்). எனவே அதனைச் சிறிது திரித்து, நுண்மி, நுணியி, நூரி (நூ எனில் எள், மிகச்சிறியதைக் குறிக்கும்), நூசி, நூமி என்று பலவாறு செய்து கொள்ளலாம்.--C.R.Selvakumar 00:07, 1 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

கணிமையில் வைரஸ் இனை நச்சுநிரல் என்று பயன்படுத்துகிறோம். உயிரியலில் நச்சுயிரி என்ற பயன்பாடு பொருந்தி வருமா? --மு.மயூரன் 12:31, 15 நவம்பர் 2006 (UTC)

mauran, இப்பக்கதில் இரண்டாவதாக உள்ள இடுகையை பாருங்கள். virus ஓர் உயிர் / உயிரி அல்ல.--Ravidreams 12:49, 15 நவம்பர் 2006 (UTC)

திண்ணி/தின்னி எது சரி? --மு.மயூரன் 12:34, 15 நவம்பர் 2006 (UTC)--மு.மயூரன் 12:34, 15 நவம்பர் 2006 (UTC)

இரண்டும் சரியானது, ஆனால் வேறு வேறு பொருள் தருவது. தின்னி என்றால் உண்ணும் உயிரினம் அல்லது அது போன்ற ஏதோ ஒன்று .உண்ணுதல் போல் தின்னுதல். பொதுவாக விலங்குகளுக்குப் பயன்படுத்துவர். தின்னு என்பதில் இருந்து தீனி = உண்ணப்படுவது. திண்ணி என்றால் உறுதியானது என்று பொருள். திண்மம், திருக்குறளில் எண்ணிய எண்ணியாங்கு எய்துபர், எண்ணியர் திண்ணியராகப்பெறின் என்னும் குறளில், திண்ணியர் என்றால் உறுதிப்பாட்டோடு உள்ளவர் (one who is steadfast in). திண்--> திட்--> திடம், திட்டு (வலிந்து உரைத்தல், கெட்டியாக உள்ள இடம்), திட்டம் (உறுதியான முறைமைகள் வகுத்து செய்தது). --செல்வா 11:43, 14 ஏப்ரல் 2008 (UTC)

தீ நுண்மம் என்பதைக் காட்டிலும், தீநுண்மி என்னும் சொல் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். விசமி என்பது போலவும் இருக்கும் :) நுண்ணியது நுண்மி. --செல்வா 11:41, 14 ஏப்ரல் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீ_நுண்மம்&oldid=2305990" இருந்து மீள்விக்கப்பட்டது