பேச்சு:தீரன் சின்னமலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்தக் கட்டுரையில் உயர்வுநவிற்ச்சி பரவலாக எடுத்தாளப்பட்டுள்ளது. மேலும் சாதிப் பெயர்களை அவசியமற்றப் போது கொடுக்காமல் விடவேண்டும்.--டெரன்ஃச் \பேச்சு 10:06, 21 ஜனவரி 2008 (UTC)

தவறான வரலாறு?[தொகு]

அய்யா தீரன் சின்னமலை பற்றிய கட்டுரை படித்தேன் , அதில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான செய்திகள் எந்தவிதமான மேற்கொள்ளும் இல்லாததாக தான் உள்ளது .. அதில் மேற்கோள் என்று ஒரு பதிவை வெளி இனிப்பாக வேய்துள்ளார்கள் அது அவர்களின் சமுதாயத்தினரால் எழுதுபட்டவை .. ஆங்கிலேயர்க்கு போராடினார் என்பது உண்மையா இருந்தாலும் .. கரும்புள்ளி , செம்புள்ளி குத்தினார் போன்ற பல விஷயங்கள் வரலாற்றிலேயே இல்லாததாக உள்ளது . சின்னமலை பற்றிய ஆங்கிலேய ஆவணங்களில் இருந்தால் அதனை மட்டுமே போடுவது தான் வரலாறு ஆகும் ,, சாதியை பற்றி போடும் பொழுது அதில் ஏற்றம் சொன்னால் பரவா இல்லை .. ஆனால் இதனை போன்ற செய்திகள் வரலாறு . தவறான வரலாறை போடுவது தவறான செய்தியை கொண்டு செல்வதற்கு அமையும் .. வரலாற்று மாணவன் என்ற முறையில் என் கருத்தை சொல்கின்றேன் ,, அதில் தவறு இருந்தால் அதனை மாற்றி தகுந்த வரலாற்றை மாற்றி பதிவு செய்யும்படி கேட்டுகொள்கிறேன் . நன்றி அய்யா .. -raja naicker

ராஜா, தங்களுடைய கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. ஆங்கிலேய ஆவணங்களில் இருப்பது மட்டுமே உண்மை என்பது போல் உங்கள் கருத்து உள்ளது. தீரன் சின்னமலைக் கட்டுரையில் கட்டுரைக்கு ஆதாரமாக சில மேற்கோள்கள் சுட்டப்பட்டுள்ளன. தாங்கள் வரலாற்று மாணவர் என்பதால் இது குறித்த மேலும் நல்ல கருத்துக்களைச் சேர்க்கலாம். தவறு இருக்கும் நிலையில் அக்கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். இந்த உரையாடல் பகுதி என்னுடைய பயனர் உரையாடல் பக்கத்திலிருந்து அப்படியே தீரன் சின்னமலை கட்டுரையின் உரையாடலுடன் இணைக்கப்படுகிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:46, 26 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ஓதாலன் இல்லை. அது ஓதாளன்.

பெரியாத்தா இல்லைங்க. அது பெரியாத்தாள் னு வரனும். ரத்னசாமி கவுண்டர்ல க் missing. KathisKumaravel (பேச்சு) 15:42, 2 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

தீரன் சின்னமலை தந்தையின் பெயர் இரத்தினச் சர்க்கரை என்பதே சரியானது[1]--தாமோதரன் (பேச்சு) 16:02, 2 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

  1. அண்ணமார்சுவாமி ப. கிருஷ்ணசாமி, தொகுப்பாசிரியர் (1998). கொங்கு நாட்டு வரலாறு. காவ்யா. பக். 41. https://books.google.co.in/books?id=2XIzAAAAMAAJ&q=தாயார்+பெரியாத்தா. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீரன்_சின்னமலை&oldid=3209568" இலிருந்து மீள்விக்கப்பட்டது