பேச்சு:தீபாவளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபாவளி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தீபாவளி என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தீபாவளி என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தீபாவளி என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தீபாவளி முக்கிய விழாவா?[தொகு]

கட்டுரை முழுக்க சமய மற்றும் உயர்மட்ட சமூகப் பார்வையிலேயே எழுதப்பட்டுள்ளது. மாற்றி எழுத வேண்டும். கிராமங்களில், எளிய மக்கள் வாழ்வில் தீபாவளி கொண்டாடப்படும் விதமே வேறு. கங்கா ஸ்நானம் ஆச்சா என்று என் வாழ்நாளில் யாரும் என்னிடம் கேட்டதில்லை ;) ! தீபாவளி அன்று ஆண்கள் வேட்டி அணிவர் என்று பொதுமைப்படுத்துவது தவறு. இலங்கை இந்துக்களின் வாழ்வில் தீபாவளிக்கான முக்கியத்துவம் மாறுபடுகிறது என நினைக்கிறேன். ஜெர்மனியில் நான் கண்ட இலங்கை இந்து ஒருவர் பொங்கலே அவர்களுக்கு முக்கியத் திருநாள் என்றார். இந்தியாவில் சாதிப் பாகுபாடின்றி கொண்டாடப்பட்டாலும், பிற மதத்தினர் அவ்வளவாக கொண்டாடுவது இல்லை. பிற சமய சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடிக்கலாம். அவ்வளவு தான். அவர்கள் சமயச் சடங்குகளில் ஈடுபடுவதில்லை. தீபாவளியை முன்னிட்டுப் புத்தாடைகள் எடுப்பது, இனிப்புகள் செய்வது, நிறுவனங்கள் bonus அளிப்பது குறித்தும் குறிப்பிடலாம். பட்டாசு வெடிப்பது, அதை ஒட்டி எழும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மாசுக்கட்டுப்பாடு விழிப்புணர்வு குறித்தும் எழுதப்பட வேண்டும்--ரவி 10:19, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ரவி நிச்சயமாக மாற்றி எழுதப்படவேண்டியதே, பொங்கல் (திருநாள்) இலங்கையில் கமக்காரர்கள்(விவசாயிகள்) அநேகமாக மதவேறுபாடின்றி (இந்து, கிறீஸ்தவர்) எல்லாருமே கொண்டாடுகின்றார். எனது மன்னாரில் உள்ள கிறீஸ்தவ நண்பரும் இதைக்கொண்டாடுகின்றார். தீபாவளி இந்துக்கள் மாத்திரம் இலங்கையில் தீபாவளியைக் கொண்டாடுவதால் முக்கியத்துவம் ஓரளவு குறைந்திருக்கலாம். தவிர இலங்கையில் விளக்கீட்டின் போது வீதிகளில் விதம் விதமான விளக்குகள் வைத்திருப்பார்கள் பாடசாலைக் காலத்தில் இதைப்பார்பதற்கென்றே விளக்கீடன்று பலகிலோமீட்டர்கள் சைக்கிளில் யாழ்ப்பாணத்தை வலம் வருவேன். இலங்கையில் அகல்விளக்குகள் பாவிக்காமையும் முக்கியத்துவத்தைக் குறைத்து இருக்கலாம் --Umapathy 10:51, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

என் ஊர் உட்பட நான் பார்த்த தமிழக கிராமங்களில் தீபாவளிக்கு விளக்கேற்றியே நான் பார்த்ததில்லை. நகரங்களில் கூட இவ்வழக்கம் குறைவு தான். கார்த்திகைத் திருநாளுக்குத் தான் அனைத்து இல்லங்களிலும் விளக்கேற்றுவர். சமயக் காரணங்களைத் தாண்டி (அல்லது அவை நீர்த்துப் போய்), புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள், கேளிக்கை, தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பொழுதுபோக்குகள் என்று கொண்டாட்டத்தின் வடிவம் மாறி வருகிறது. நிச்சயம் இதைக் கட்டுரையில் குறிப்பிட வேண்டும். பழம்புராண வழக்கை மட்டும் கட்டுரையில் குறிப்பிடுவதோடு நிறுத்தி விடக்கூடாது. பெரும்பாலான வீடுகளில் (குறிப்பிட்ட உயர் சாதி வீடுகள் தவிர்த்து), எண்ணெய் தேய்த்துக் குளித்து, பொத்தாம் பொதுவாய் வீட்டிலோ கோயிலிலோ சாமி கும்பிட்டு விட்டு மற்ற கேளிக்கைகளுக்கு சென்று விடுகின்றனர். பிற இந்து சமயக் கொண்டாட்ட வழிபாடுகளுக்கும் தீபாவளி வழிபாட்டுக்கும் பெரியவேறுபாடு ஒன்றும் நான் கண்டதில்லை--ரவி 11:01, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, உமாபதி, தீபாவளிக்கு பின்னிருக்கும் கதையாடல்களின் ஒப்பீடு இன்னும் சுவையானவை. வட இந்தியர்கள் பல இராவணனைக் கொன்ற அல்லது கொன்று இராமர் திரும்பிய நாள் தீபாவளி என்கின்றார்கள். அதாவது இருட்டு அகன்று ஒளி வந்த நாள், என்று தீபங்கள் ஏற்றி கொண்டாடுகிறார்கள். "Festival of Lights" அப்படித்தான் சொல்கிறார்கள்.

ஆனால், இலங்கையில் எதோ ஒரு அசுரனை விஷ்னு கொன்றதாகத்தான் சமயப் பாடப்புத்தகம் ஒன்றில் உள்ளது. மேலும், தீபம் ஏற்றி கொண்டாடவுது கிடையாது. உமாபதி சொன்னபடி விளக்கீடு என்ற ஒரு நாளில்தான் அப்படி கொண்டாடுவது யாழில் வழக்கம். தீபாவளி எம்மைப் பொறுத்தவரை ஒரு முக்கிய விழா இல்லை. நேற்று வந்த ஒரு விருந்தினர் கூறித்தான் இன்று தீபாவளி என்றே தெரியும். இருப்பினும், தீபாவளி வாழ்த்துக்கள். --Natkeeran 15:36, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

எனக்குத் தெரிந்த அளவிலும் தீபாவளி ஒரு முக்கிய விழவாக இல்லை. தீபாவளிக்கு வாழ்த்துக் கூறும் வழக்கமிருக்கிறது. அவ்வளவுதான்.--கோபி 15:44, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

வெளிநாடுகளில் தீபாவளி[தொகு]

வெளிநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்ற இந்துப் விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்மஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

பயனர் வருகை[தொகு]

தீபாவளியை ஒட்டி இக்கட்டுரைக்கு அதிக வரவுகள் வந்திருப்பது கவனிக்கத்தக்கது. வருங்காலத்தில் இது போன்ற கட்டுரைகளை முன்னரே அனுமானித்து மேம்படுத்தலாம். பொங்கல், கிறிஸ்துமஸ் இது போன்ற கட்டுரைகளில் சில.--ரவி 15:25, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீபாவளி&oldid=3781469" இலிருந்து மீள்விக்கப்பட்டது