பேச்சு:திலகரத்ன டில்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கில விக்கிபீடியாவில் திலகரட்ண டில்ஷான் முஸ்லிமாக இருந்து பௌத்தத்திற்கு மாறியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்து நம்பமுடியாத தகவலாய் உள்ளதால் மொழிபெயர்க்கவில்லை. யாராவது கிரிக்கட் ஆர்வலர்கள் இதைச் சரிபார்க்கவும். --Umapathy 14:32, 3 ஏப்ரல் 2007 (UTC)

இது உண்மைத்தான் [1] இவர் Tuwan Mohamad Dilshan எனவும் அறியப்பட்டிருந்தார்.--டெரன்ஸ் \பேச்சு 14:38, 3 ஏப்ரல் 2007 (UTC)

கட்டுரைத் தலைப்பை திலகரத்ன டி(தி?)ல்ஷான் என மாற்றலாமா?இதுவே மூலப்பெயருக்கு நெருக்கமாக இருக்கும் என நினைக்கிறேன்.--Sivakumar \பேச்சு 15:43, 3 ஏப்ரல் 2007 (UTC)

சிவகுமார், தாங்கள் கூகிள் தேடலை மேற்கொண்டபோது இந்திய இணையப்பக்கங்களில் எடுத்துக்காட்டாக http://in.tamil.yahoo.com/News/Sports/0704/01/1070401032_1.htm யாஹூ! செய்திகளில் நீங்கள் கூறியபடியே உள்ளது. இலங்கையில் வீரகேசரிப் பத்திரிகையில் டில்ஷான் என்றவாறே குறிப்பிடப்பட்டுள்ளது எடுத்துக்காட்டக http://www.virakesari.lk/vira/sports/sp_news.asp?key=1578. எனக்குப் பக்கத்தை நகர்த்துவதில் ஆட்சேபனை இல்லை வழிமாற்றுப்பக்கம் இருந்தால் போதுமானது--Umapathy 16:05, 3 ஏப்ரல் 2007 (UTC).

அவ்வாறே செய்திருக்கிறேன் உமாபதி. நன்றி.--Sivakumar \பேச்சு 16:59, 3 ஏப்ரல் 2007 (UTC)
நன்றி சிவகுமார், திவயின என்ற சிங்களப் பத்திரிகையில் டில்சான் என்றமாதிரியே எழுதப்பட்டுள்ளது. --Umapathy 16:55, 4 ஏப்ரல் 2007 (UTC)