பேச்சு:திறந்த சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறிப்புகள்[தொகு]

திறந்த சந்தை பொருளாதார தத்துவம் தனி உடமையும் உரிமைகளையும் வலியுறுத்துகின்றது. சமூகத்துக்கு பயனளிக்கும் பொருட்களையும் சேவைகளை செய்வதன் மூலம் இலாபம் ஈட்டும் தனியார் வியாபார தாபனங்களை திறந்த சந்தை வலியுறுத்துகின்றது. எது எப்படி உற்பத்தி செய்யப்படுதல் என்பதை திறந்த சந்தையே தீர்மானிக்கின்றது. அதாவது மக்கள் பொருட்களை சேவைகளை சந்தையில் தெரிவதன் மூலம் வியாபார தாபனங்களிற்க்கு தமது விருப்பு வெறுப்புக்களை தெரிவிக்கின்றார்கள்.


அரசு இயன்றவரை இத் தனியார் நிறுவனங்களை சுயமாக இயங்க விட வேண்டும் என்பதும், திறந்த சந்தை ஊடாக மக்கள் தங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யலாம் என்பதும் இத் தத்துவத்தின் முக்கிய கூறுகள்.

விமர்சனங்கள்[தொகு]

நடைமுறையில் இத்தத்துவம் பொருளாதார வழங்கள் அனைத்தையும் ஒரு குறுகிய அதிகார வர்கத்துக்குள் குவிய வழி செய்கின்றது என்ற விமர்சனம் உண்டு.

மேலும், குமுகாயத்தின் சமத்துவத்தை பேணுவத்திற்கும், பொது நலத்தை பேணுவதற்க்கும் இத் தத்துவத்தில் வழி சொல்லப்ப்டவில்லை.

--Natkeeran 15:15, 28 ஜூன் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திறந்த_சந்தை&oldid=257909" இருந்து மீள்விக்கப்பட்டது