பேச்சு:திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவொற்றியூர் படம்பக்கநாதர் கோயில், திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் இரண்டும் ஒன்றே என்று கருதுகிறேன்...திருவொற்றியூர் வடிவுடையம்மன் தலத்து இறைவனாரின் வேறு பெயரில் உள்ளன என்று கருதுகிறேன்.

அல்லது துணைக்கோயில் அல்லது இளங்கோயில் தகவலா?

சுவாமி: ஆதிபுரீசர், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமான்,.. அம்பிகை: திரிபுரசுந்தரி வடிவுடையம்மை. [1]

திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் நடைமுறையில் வடிவுடையம்மன் கோயில் என்றே வழங்கப்படுகிறது.. -−முன்நிற்கும் கருத்து Kuzhali.india (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

குழலி, ஆம். நீங்கள் சொல்வது சரி தான். உங்கள் ஐயத்திற்கான விடை இந்து சமய அறநிலையத் துறையின் தளத்தில் உள்ளது. இந்த தலத்தில் மரம், இறைவன், இறைவி, தீர்த்தம் ஆகிய அனைத்தும் இரட்டையாக உள்ளன. இரு கட்டுரைகளும் விரைவில் இணைக்கப்படும். பேச்சுப் பக்க உரையாடல்களில் தொடர்ந்து பங்கெடுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:48, 8 ஆகத்து 2014 (UTC)[பதில் அளி]
கட்டுரைகள் இணைக்கப்பட்டன! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:49, 12 ஆகத்து 2014 (UTC)[பதில் அளி]
  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 9